Ad

செவ்வாய், 8 ஜூன், 2021

கொரோனா: இந்தியாவில் 2-வது நாளாக ஒரு லட்சத்துக்கும் குறைவாக பதிவான தினசரி பாதிப்பு! #NowAtVikatan

இந்தியாவில் கொரோனா நிலவரம்!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் புதிதாக 92,596 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது. இந்தியாவில் தொடர்ந்து இரண்டாவது நாளாக கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்துக்கும் கீழ் பதிவாகியுள்ளது. இதன் காரணமாக, இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு 2,90,89,069 என்ற எண்ணிக்கையை எட்டியிருக்கிறது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 2,219. இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பு காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 3,53,528 -ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா முடிவுகள்

இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வந்தவர்களின் எண்ணிக்கை 2,75,04,126 -ஆக இருக்கிறது. தற்போது மருத்துவமனைகளில் 12,31,415 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள். ஒரே நாளில் 1,62,664 பேர் பாதிப்பிலிருந்து மீண்டு வீடு திரும்பியிருக்கிறார்கள்.

இந்தியாவில் இதுவரை 23,90,58,360பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது.

மும்பை: ஒற்றை இலக்கமாக குறைந்த கொரோனா உயிரிழப்பு!

மும்பையில் கொரோனா தொற்றின் வேகம் படிப்படியாக குறைந்து வந்தது. ஏப்ரல் மாத இறுதியில் உச்சத்தில் இருந்த கொரோனா தொற்று மாநகராட்சி நிர்வாகத்தின் தொடர் நடவடிக்கையாலும், மாநில அரசு கொண்டு வந்த கட்டுப்பாடுகளாலும் தொடர்ந்து குறைந்து வந்தது. கடந்த மார்ச் 28ம் தேதிக்கு பிறகு இப்போது மும்பையில் கொரோனா உயிரிழப்பு 7 -ஆக குறைந்துள்ளது. தினத்தொற்றும் 673 -ஆக குறைந்துள்ளது. கடைசியாக கடந்த மார்ச் 28ம் தேதி கொரோனா தொற்று மூலம் 8 பேர் மும்பையில் உயிரிழந்திருந்தனர்.

கொரோனா சிகிச்சைப் பிரிவு

அதன் பிறகு இப்போதுதான் இந்த அளவுக்கு கொரோனா உயிரிழப்பு குறைந்துள்ளது. மும்பையில் இது வரை கொரோனாவிற்கு 15,073 பேர் உயிரிழந்துள்ளனர். அதோடு 15,701 பேர் மட்டுமே மும்பையில் கொரோனாவிற்கு தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் அளவு 95 சதவீதமாக இருக்கிறது. கடந்த ஏப்ரல் 4-ம் தேதி ஒரே நாளில் மும்பையில் அதிகபட்சமாக 11,163 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது கொரோனா குறைந்திருப்பதால் மாநில அரசு கட்டுப்பாடுகளை தளர்த்தியிருக்கிறது. ஆனாலும் இன்னும் புறநகர் ரயில்களில் பொதுமக்கள் பயணம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. கடந்த முறை புறநகர் ரயில்களில் பொதுமக்கள் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்ட பிறகுதான் மும்பையில் கொரோனா தொற்று அதிகரித்தது குறிப்பிடதக்கது.

-ஐயம்பெருமாள்



source https://www.vikatan.com/news/general-news/09-06-2021-just-in-live-updates

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக