Ad

வெள்ளி, 1 ஜனவரி, 2021

பாண்டிச்சேரி பார்ட்டி... அபிக்கு வந்த சிக்கலான டாஸ்க்... பார்ட்டியில் நடந்தது என்ன? #VallamaiTharayo

பாண்டிச்சேரி வீக் எண்ட் பார்ட்டி...

இரவில் ஆண்களும் பெண்களும் இரு அணிகளாகப் பிரிந்து விளையாட ஆரம்பிக்கிறார்கள். குலுக்கல் முறையில் ஆண்களில் இருந்து ஒருவரும் பெண்களில் இருந்து ஒருவரும் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்கள் எடுக்கும் சீட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் டாஸ்க்கை செய்ய வேண்டும்.

Vallamai Tharayo

முதலில் பட்டாச்சார்யாவும் ஓர் இளம் பெண்ணும் வந்து, அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட டான்ஸ் டாஸ்கை ஆடி முடிக்கிறார்கள். அடுத்து லோகேஷும் வீணாவும் வருகிறார்கள். லோகேஷ் மாதிரி வீணாவும் வீணா மாதிரி லோகேஷும் செய்துகாட்ட வேண்டும். வீணா மாதிரியே லோகேஷ் பேச, அனைவரும் கைதட்டி ஆர்ப்பரிக்கிறார்கள். எரிச்சலடையும் வீணா, லோகேஷ் மாதிரி நடித்துக் காட்டுகிறாள். பிறகு, திங்கள் காலை 11 மணிக்கு என் கேபினுக்கு வரவேண்டும் என்று மிரட்டிவிட்டு அமர்கிறாள்.

அடுத்தது கெளதமும் அபியும் வருகிறார்கள். அபிக்கு புரொபோஸ் செய்யவேண்டும் என்பது டாஸ்க். மிக சங்கடமான டாஸ்க். அபியின் சங்கடத்தைப் பார்த்த கெளதம், “எனக்கு புரொபோஸ் செய்யத் தெரியாது. அதில் நம்பிக்கையும் இல்லை. எனக்குப் பிடிச்ச பெண் வாழ்க்கைத் துணையா கிடைச்சா எப்படி வச்சுப்பேங்கிறதை ஷேர் பண்றேன். காதல் ஜெயிச்சிருச்சுனு சொல்றதும் காதல் தோத்துருச்சுனு சொல்றதும் என்னைப் பொறுத்தவரை சரியில்ல.

Vallamai Tharayo

அது இரு காதலர்களுக்கு மட்டும்தான். காதலுக்கு வெற்றி, தோல்வி கிடையாது. அது ரொம்ப அழகான உணர்வு. நம்மை அதுக்குத் தகுதியா மாத்திக்கிட்டுதான் அதைத் தேடிப் போகணும். ஒரு புரொபோசல் வந்திருச்சு. செட் ஆனா கல்யாணம் பண்ணிக்கலாம். அப்புறம் செட் ஆகலைனா டிவோர்ஸ் பண்ணிக்கலாம்ங்கிறதும் காதல் இல்ல. குறை இல்லாதவங்களே இருக்க முடியாது. அதைப் பெரிதாக்காமல் விட்டுக் கொடுத்து வாழறதுக்குப் பேருதான் காதல். காதலில் அறிவுக்கு இடம் இல்ல, அன்புக்குதான் இடம் உண்டு” என்று நீண்ட விளக்கம் கொடுத்துட்டு அமர்கிறான்.

கெளதம் பேசியதில், ‘காதலுக்கு நம்மைத் தகுதியாக்கிட்டுதான் அதைத் தேடிப் போகணும்’ என்ற கருத்து சிறப்பாக இருக்கிறது. அன்பு இருக்கும் இடத்தில் அறிவுக்கு வேலை இல்லை என்பது சரியல்ல. அன்பும் அறிவும் சேரும்போதுதான் எந்த விஷயமும் சிறப்பானதாக மாறும்.

டாஸ்கிலேயே இந்த எபிசோட் முடிந்துவிட்டது. அடுத்து என்ன?

திங்கள் இரவு 7 மணிக்குப் பார்க்கலாம்!

- எஸ்.சங்கீதா



source https://cinema.vikatan.com/web-series/vallamai-tharayo-digital-daily-series-review-for-episode-50

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக