Ad

செவ்வாய், 26 ஜனவரி, 2021

ஜெயலலிதா நினைவிடம் திறப்பு விழா: மெரினாவில் குவிந்த அ.தி.மு.க வினர்

மறந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்டும் பணி, கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் தொடங்கியது. 79 கோடி ரூபாய் மதிப்பில் ஃபீனிக்ஸ் பறவை வடிவில் பிரம்மாண்ட நினைவிடம் அமைக்கும் பணி தற்போது முடிவடைந்துள்ளது. இந்த நினைவிடம் இன்று திறக்கப்பட உள்ளது.

மறந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைக்கப்படும் என்று 2017-ம் ஆண்டு ஜூன் 28-ம்தேதி முதல்வர் பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவித்தார். அதன்படி, 50,422 சதுரஅடியில் நினைவிடம் அமைக்க முதல் கட்டமாக ரூ.50.80 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. கட்டுமானப் பணிகளை கடந்த 2018-ம் ஆண்டு முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தொடங்கி வைத்தனர். அதன்பின், நினைவிட கட்டுமானப் பணிக்கான கூடுதல் நிதி மற்றும் 5 ஆண்டுகள் பராமரிப்புக்கான நிதி ரூ.79.75 கோடியாக உயர்த்தப்பட்டது.

ஃபீனிக்ஸ் பறவை போன்ற அமைப்பு கொண்ட இந்த நினைவிடத்தை, இன்று காலை 11 மணிக்கு முதல்வர் பழனிசாமிதிறந்து வைக்கிறார். இந்நிகழ்ச்சிக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலை வகிக்கிறார். இதற்காக தமிழகம் முழுவதும் இருந்து அ.தி.மு.க தொண்டர்கள் சென்னை மெரினாவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

Also Read: ஜெயலலிதா நினைவிடம் திறப்பு விழா: `மதுரைக்காரன் எதையும் வித்தியாசமா செய்வான்’ - செல்லூர் ராஜூ



source https://www.vikatan.com/government-and-politics/politics/jayalalithaa-memorial-opening-ceremony

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக