விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் ஜனவரி 13-ம் தேதி பொங்கலுக்கு உலகமெங்கும் வெளியானது 'மாஸ்டர்' திரைப்படம். கொரோனாவால் முடங்கியிருந்த திரையரங்குகளுக்கு மறுவாழ்வு கொடுத்தது 'மாஸ்டர்' என்றே சொல்லலாம். 'மாஸ்டர்' படம் பார்க்க ரசிகர்கள், குடும்பங்கள் எனக் கூட்டம் கூட்டமாகத் திரையரங்குகளுக்கு மக்கள் படையெடுத்தனர். இந்நிலையில், இன்னும் தமிழகமெங்கும் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் மாஸ்டர் நாளை மறுநாள் (ஜனவரி 29-ம் தேதி) அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில் வெளியாகவுள்ளது என்பது உறுதிசெய்யப்பட்டிருக்கிறது.
புதிதாக மூன்று நிமிடங்களுக்கு 'மாஸ்டர்' டிரெய்லர் ஒன்றை அதன் தளத்தில் வெளியிட்டிருக்கிறது அமேசான் ப்ரைம் வீடியோ. அதில் ஜனவரி 29 படம் வெளியாகும் என்பது குறிப்பிடப்பட்டிருக்கிறது.
Also Read: மாஸ்டர் - சினிமா விமர்சனம்
"அமேசானில் இப்படி படம் வெளிவருவதால் பலரையும் சென்றுசேரும் 'மாஸ்டர்'. தியேட்டரில் ரிலீஸ் செய்ய வாய்ப்பு கிடைக்காத பகுதிகளில் இருக்கும் பலரும் மாஸ்டரை பார்க்க முடியும்" என அதில் தெரிவித்திருக்கிறார் விஜய் சேதுபதி.
அமேசான் ப்ரைம் வீடியோவின் இந்தியாவின் கன்டென்ட் ஹெட் விஜய் சுப்ரமணியன், "இந்த வருடத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தமிழ்ப் படங்களில் ஒன்று 'மாஸ்டர்'. அதை இந்தியா மற்றும் 240 நாடுகளில் இருக்கும் எங்கள் சந்தாதாரர்களுக்கு இந்த மாதமே கொண்டுசெல்லும் வாய்ப்பு கிடைத்திருப்பது மகிழ்ச்சி. இது உலகமெங்கும் வாடிக்கையாளர்களுக்கு வீட்டிலிருந்தே பாதுகாப்பாகப் படம் பார்க்கும் வாய்ப்பை தருகிறது" எனத் தெரிவித்திருக்கிறார்.
ஒரு பெரிய நட்சத்திரத்தின் படம் திரையரங்குகளில் வெளியான வெறும் 16 நாட்களில் வெளியாவது இதுவே முதல்முறை. 'மாஸ்டர்' தியேட்டரில் ரிலீஸாகி 45 நாள்களுக்குப்பிறகுதான் ஓடிடியில் வெளிவரும் என முன்னர் ஒப்பந்தம் போடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
source https://cinema.vikatan.com/tamil-cinema/master-to-release-on-amazon-prime-video-by-january-29
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக