Ad

புதன், 27 ஜனவரி, 2021

"எனக்கு பத்மஶ்ரீ விருது அந்த இருவர் போட்ட பிச்சை!"- சாலமன் பாப்பையா

"தமிழுக்காக இந்த விருது கிடைச்சது பெரிய மகிழ்ச்சி. ரெண்டாவது பட்டிமன்றதுக்குக் அங்கீகாரம் கிடைச்சிருக்குறது இன்னும் பெரிய சந்தோஷத்தை கொடுத்திருக்கு. இந்தப் பட்டிமன்ற அரங்கத்துக்கு என்னைக் கொண்டு வந்தது சா.கணேசன். எனக்கு இன்னைக்கு பத்மஶ்ரீ கிடைச்சிருக்குனா இது அவர் போட்ட பிச்சைதான். அவரை இந்த நாள்ல நினைச்சு பார்க்குறேன். அப்புறம், பட்டிமன்றத்தை டிவிக்கு கொண்டு வந்தவர் குன்றக்குடி அடிகளார். எனக்கு உறுதுணையாயிருந்த ஊடகங்களுக்குப் பெரிய நன்றி சொல்லணும். எப்பவும் விருதுகளுக்காக ஓடலை. மக்களுக்கு நல்லது சொல்லணும்னுதான் பேசிட்டு இருந்தேன். எனக்கு கிடைச்ச பத்மஶ்ரீ விருதை தமிழுக்காக அர்பணிக்கிறேன்."

மத்திய அரசிடம் இருந்து இப்படி ஓர் அங்கிகாரம் எதிர்பார்த்தீங்களா?

சாலமன் பாப்பையா

"இல்லவே இல்ல. இதுக்காக ஒரு முயற்சியும் பண்ணல. எல்லாருமே, எப்படி கிடைச்சதுனு கேட்குறாங்க. எனக்கு ஆச்சர்யமா இருக்கு. திடீர்னு பன்னிரண்டு மணிக்கு டெல்லியில் இருந்து அழைப்பு வந்தது. உள்துறை செயலாளர் விஷயத்தை சொன்னாங்க. அப்போல இருந்து இப்போ வரைக்கும் எனக்கு பரபரப்பாதான் இருக்கு. முக்கியமா, வீட்டுல இருந்தவங்களுக்கும் பெரிய சந்தோஷம். இந்த முதுமையில திடீர்னு புது விதமா பலம் கிடைச்ச மாதிரியிருக்கு. என்னோட வயசு 85 ஆச்சு. கிட்டத்தட்ட 58 வருஷமா பட்டிமன்றத்துல இருக்கேன்."

சிலருக்கு இறப்புக்கு பிறகு கிடைக்குற விருதுகளை எப்படி பார்க்குறீங்க?

எஸ்.பி.பி.

"எஸ்.பி.பிக்கு கூட இறப்புக்குப் பிறகுதான் இரண்டாவது பெரிய விருதான பத்ம விபூஷன் விருது கிடைச்சிருக்கு. மேதமையான மனிதருக்கு வாழ்வு காலத்துல அது கிடைக்கமா போனது வருத்தமான விஷயம்தான்."



source https://cinema.vikatan.com/television/solomon-pappaiah-talks-about-receiving-padma-shri-award

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக