விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் நாளை உலகமெங்கும் வெளியாகவுள்ளது 'மாஸ்டர்' திரைப்படம். இந்த திரைப்படத்தின் காட்சிகள் நேற்று இணையத்தில் கசிந்தது தமிழ் திரையுலக வட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. படக்குழு மட்டுமல்லாமல் ரசிகர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருந்தது இந்த சம்பவம். பெரும் எதிர்பார்ப்புக்கிடையே வெளிவரும் 'மாஸ்டர்' திரைப்படத்தின் காட்சிகளை லீக் செய்தது யார் என்பது ஒரு வழியாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Also Read: இணையத்தில் கசிந்த `மாஸ்டர்' காட்சிகள்... பகிர வேண்டாம் என படக்குழு வேண்டுகோள்!
இந்த விசாரணையில் மாஸ்டர் குழுவுக்கு ட்விட்டர் நிறுவனம் உதவியிருப்பதாகத் தெரிகிறது. ஒரு தனியார் சினிமா நிறுவனத்தின் ஊழியர் ஒருவரே திரைப்படத்தின் காட்சிகளை மொபைலில் படம்பிடித்து அதை வெளியில் பகிர்ந்திருக்கிறார். வெளிநாட்டுத் திரையரங்குகளுக்கு விநியோகம் செய்வதற்காகப் படத்தின் பிரதி அந்த நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டிருக்கிறது.
குறிப்பிட்ட நபர் மீது தயாரிப்பு நிறுவனம் போலீசில் புகார் அளித்திருக்கிறது. அதன்படி அந்நிறுவனம் தற்காலிகமாக முடக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில் அந்த நபரும் கைது செய்யப்படவிருக்கிறார்.
கசிந்திருக்கும் காட்சிகளை யாரும் பகிர வேண்டாம் எனப் படக்குழு மட்டுமல்ல தமிழ் திரையுலகைச் சேர்ந்த பலரும் கேட்டுக்கொண்டுள்ளனர். ரசிகர்களும் பரப்பப்படும் காட்சிகள் குறித்து உடனுக்குடன் புகார் தெரிவித்து வருகின்றனர்.
இணையத்தளங்களிருந்து காட்சிகளை மொத்தமாக நீக்கும் முயற்சியிலும் படக்குழு ஈடுபட்டுள்ளது. இந்த சூழலில் #WeStandWithMaster என்று ஹேஷ்டேக் ட்ரெண்ட் செய்து வருகின்றனர் ரசிகர்கள்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என நான்கு மொழிகளில் வெளிவருகிறது 'மாஸ்டர்' என்பது குறிப்பிடத்தக்கது.
source https://cinema.vikatan.com/tamil-cinema/master-scenes-leaked-culprit-found
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக