Ad

செவ்வாய், 26 ஜனவரி, 2021

ஜெயலலிதா நினைவிடம் திறப்பு விழா: `மதுரைக்காரன் எதையும் வித்தியாசமா செய்வான்’ - செல்லூர் ராஜூ

சென்னை மெரினாவில் ஜெயலலிதா நினைவிட திறப்பு விழாவில் மதுரையிலுள்ள கட்சியினர் கலந்துகொள்ள, தனி ரயிலை ஏற்பாடு செய்து அவர்களுடன் அமைச்சர் செல்லூர் ராஜூ பயணித்த சம்பவம் அனைவராலும் கவனிக்கப்பட்டது.

செல்லூர் ராஜூ

ஜெயலலிதாவின் நினைவிடத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் இன்று திறந்து வைக்கிறார்கள். இதற்காக பல்வேறு மாவட்ட கட்சி நிர்வாகிகள் வாகனங்களில் சென்னை வந்துள்ளனர்.

இந்நிலையில் மதுரையை சேர்ந்த 5,000-க்கும் மேற்பட்ட கட்சியினரை சென்னைக்கு அழைத்து செல்ல முடிவெடுத்த செல்லூர் ராஜூ, பேருந்துகள் மட்டும் போதாது என்று, தனி ரயில் மூலம் அழைத்து சென்றார்.

செல்லூர் ராஜூ

திருமங்கலம் அருகில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஜெயலலிதாவுக்கு கோயில் கட்டி, வருகின்ற 30-ம் தேதி முதலைமைச்சர் அதனை திறக்க உள்ளது குறித்து, கட்சியினரால் அதிகம் வியந்து பேசப்பட்டு வருவதால், தானும் ஜெயலலிதாவுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று முடிவு செய்த செல்லூர் ராஜூ, இந்த தனி ரயில் ஐடியாவை நடைமுறைப்படுத்தியுள்ளார்.

செல்லூர் ராஜூவின் ஐடியாவைப் பற்றி கடைசி நேரத்தில் தெரிந்துகொண்ட சக அமைச்சர்கள் ஆச்சரியப்பட்டு போனார்களாம். நேற்று இரவு 7.30 மணிக்கு மதுரையிலிருந்த புறப்பட்டு சென்னைக்கு வந்த ரயில், இன்று மாலை 5 மணிக்கு மீண்டும் மதுரைக்கு புறப்படுகிறது.

தனி ரயில்

இந்த ரயிலில் தொண்டர்களோடு அமைச்சர் செல்லூர் ராஜூவும் சேர்ந்து வந்தார். நேற்று இரவு ரயில் புறப்படும் முன் செல்லூர் ராஜூ செய்தியாளர்களிடம் பேசும்போது, "ஏற்றுக்கொண்ட, தலைவருக்கு நன்றியை வெளிப்படுத்துவதை வித்தியாசமாக செய்ய வேண்டும்.

அதனால்தான் தமிழகத்தில் முதல்முறையாக கட்சித் தொண்டர்களை ரயிலில் அழைத்து செல்கிறேன். அவர்களுடன் நானும் செல்கிறேன். நான் ஸ்டாப்பாக எங்கள் ரயில் சென்னைக்கு செல்கிறது. மதுரைக்காரன் பாசக்காரன், ரோஷக்காரன். எதையுமே வித்தியாசமாக செய்பவன். ஜெயலலிதா மீது பற்றுள்ளவன்.

செல்லூர் ராஜூ

எங்கள் அம்மா ஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்டி தந்துள்ளார் முதல்வர். அதைக்காண தொண்டர்களை அழைத்து செல்கிறேன்" என்று கண்கலங்க கூறினார். 18 பெட்டிகளுடன் செல்லும் தனி ரயிலுக்கு வாடகை 18 லட்சம் ரூபாய் என்று கட்சியினரால் சொல்லப்படுகிறது.



source https://www.vikatan.com/news/politics/sellur-raju-arranged-train-for-jayalalitha-memorial-opening-ceremony

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக