பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியோடும் உற்சாகமாகவும் கொண்டாடிக்கொண்டிருக்கும் அனைவருக்கும் விகடனின் அன்பு வாழ்த்துகள்.
டிஜிட்டல் உலகில் தேவைகளை அறிந்து அவற்றை வழங்குவதில் வாசகர்களின் கருத்துகளே எங்களுக்கான உந்துதல்.
அந்த வகையில் எண்ணற்ற வாசகர்களின் ஆன்மிக ஜோதிடப் பயன்பாடு முதலான தேவைகளுக்கு ஏற்ற வகையிலான விகடனின் மற்றுமொரு டிஜிட்டல் வெளியீடு, விகடன் ராசி காலண்டர் .
இது தினம் தினம் உங்களுக்கு வழிகாட்டும். உங்கள் எதிர்காலம் சிறக்க உதவும்.
விகடன் ராசிகாலண்டரின் சிறப்பம்சம் என்ன?
ஓர் ஆண்ட்ராய்டு செயலி அல்ல. அதே வேளையில் அதற்கு இணையான பயன்பாட்டு அனுபவத்தை உங்களுக்கு வழங்கும் நிரல் பயன்பாடு (விட்ஜெட்). இதன் சிறப்பம்சம் இதை உங்கள் அலைபேசியில் இயக்க தனிப்பட்ட சேமிப்பு இடம் தேவையில்லை என்பதுதான். அதேநேரம் டேட்டா பயன்பாடும் மிக மிகக் குறைவு. உங்கள் செல்போனில் உங்கள் விரல் நுனித் தொடுதல் மூலம் விகடன் ராசி காலண்டரை நீங்கள் விரும்பும்போது பார்த்துக் கொள்ளலாம். இத்தகைய சிறப்புகளை உடைய இந்த விட்ஜெட்டை ஒரு தொடுகையில் உங்கள் செல்போனில் நிறுவ முடியும்.
விகடன் ராசிகாலண்டரில் என்னென்ன விவரங்களை அறியலாம்?
பஞ்சாங்க விவரங்கள் : ஒரு நாளின் பஞ்ச அங்கங்களே பஞ்சாங்கங்கள். இதில் மிகவும் முக்கியமானவை, வாரம் (கிழமை), நட்சத்திரம், திதி, யோகம். இவை குறித்த விவரங்களை எளிமையாக துல்லியமாக நம் விகடன் ராசி காலண்டர் மூலம் அறிந்துகொள்ளலாம்.
நட்சத்திரங்கள் திதிகள்: திதி மற்றும் நட்சத்திர காலம் அந்த நாளில் எத்தனை மணிவரை இருக்கின்றன என்னும் விவரங்கள் குறிப்பிடப்பட்டிருக்கும்.
சூலம் -பரிகாரம் : சூலம் என்பது பயணம் தொடர்பான குறிப்பு. வழக்கமான தினப்படிப் பயணங்களுக்கு இது பொறுந்தாது. விசேஷமான அல்லது நீண்ட தூரப் பயணங்களை மேற்கொள்ளும்போது சூலம் பார்ப்பது நல்லது என்கிறது ஜோதிட சாஸ்திரம். ஒரு நாளில் கிழக்கே சூலம் என்றால் அந்த நாளில் கிழக்கு நோக்கிய பெரிய பயணங்களைத் தவிர்க்கலாம். ஆனால் அது அவசர வேலைகள் நாள்களில் அதைப் பின்பற்ற முடியாது. அதற்கான பரிகாரங்களையும் நம் முன்னோர்கள் தெரிவித்திருக்கிறார்கள். கிழக்கே சூலம் என்றால் அந்த திசை நோக்கிப் பிரயாணிக்க இருப்பவர் பரிகாரமாக தயிரை உண்டு பின் கிளம்பலாம் என்கிறது சாஸ்திரம். நம் விகடன் ராசி காலண்டரில் சூலம் - பரிகாரம் ஆகிய விவரங்கள் காணப்படும்.
விரத தினங்கள் : சஷ்டி, ஏகாதசி, பிரதோஷம், சிவராத்திரி, அமாவாசை, பௌர்ணமி ஆகிய விரத திதிகள் சிறப்புக் குறியீடுகளோடு குறிப்பிடப்பட்டிருக்கும். இவை தவிர்த்த விசேஷ விரதங்களும் குறிப்பிடப்பட்டிருக்கும். இவை உங்கள் வழிபாடுகளைத் திட்டமிட உதவியாக இருக்கும்.
சந்திராஷ்டம தினங்கள் : பொதுவாக சந்திராஷ்டமங்களை ராசியின் அடிப்படையில் பலரும் சொல்வார்கள். அதுவே நட்சத்திர அடிப்படையில் சொல்லும் போது ஒவ்வொருவருக்குமான துல்லியமான சந்திராஷ்டம தினத்தை அறிந்துகொள்ள முடியும். விகடன் ராசி காலண்டரில் நட்சத்திர அடிப்படையில் சந்திராஷ்டம தினங்களை அறியலாம்.
ராசிபலன் : ஒவ்வொரு நாளுக்குமான ராசிபலனை நீங்கள் அறிந்துகொள்ள முடியும். மேலும் அந்த ராசியில் உள்ள ஒவ்வொரு நட்சத்திரத்துக்குமான சிறப்பு பலன்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இவை தவிர்த்து வார ராசிபலன்கள், மாத ராசிபலன்கள் ஆகியனவற்றையும் வழங்குகிறோம். இவற்றில் ஒவ்வொரு ராசிக்குமான அதிர்ஷ்ட தினங்கள், அதிர்ஷட எண்கள், வழிபட வேண்டிய தெய்வம் ஆகிய சிறப்புத் தகவல்களும் நிறைந்திருக்கும்.
விகடன் டிஜிட்டல் ராசி காலண்டரில் உங்களை மகிழ்விக்கும் மேலும் கூடுதலான சேவைகளை விரைவில் எதிர்பார்க்கலாம்.
விகடன் ராசி காலண்டரைப் பெற இங்கே க்ளிக் செய்யுங்கள்.
உங்கள் மொபைல் ப்ரெளசரில் விகடன் ராசி காலண்டர் தளத்திற்குச் சென்றதும், `Add Vikatan Rasi Calendar to your Home Screen' என்றொரு ஆப்ஷன் கீழே காண்பிக்கும். அதை க்ளிக் செய்வதன் மூலம் மிகக்குறைந்த டேட்டா அளவில் விகடன் ராசி காலண்டர் தனியொரு மினி அப்ளிகேஷனாக உங்கள் மொபைலில் நிறுவப்படும். சிக்னல் இல்லாத நேரத்திலும் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்த முடியும் என்பது கூடுதல் சிறப்பு!
உங்கள் செல்போனின் விகடன் ராசி காலண்டரை இயக்குங்கள். பயன்படுத்துங்கள். உங்களின் கருத்துகளையும் ஆலோசனைகளையும் எங்களுக்குத் தெரிவியுங்கள்.
source https://www.vikatan.com/spiritual/astrology/specifications-of-vikatan-rasi-calendar
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக