மத்திய அரசு அறிவித்த பத்ம விருதுகளில் தமிழகத்தைச் சேர்ந்த தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு விருது வழங்கப்பட்டிருப்பது அனைவராலும் கொண்டாடப்படுகிறது.
அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்துறைத் தலைவராக பணியாற்றி ஓய்வுபெற்ற சாலமன் பாப்பையா, பட்டிமன்றங்களில் பேசி தமிழை வளர்த்தவர். தொடர்ந்து பட்டிமன்ற நடுவராகச் செயல்பட்டுவருபவர். குன்றக்குடி அடிகளாருக்குப் பிறகு படித்தவரும் பாமரரும் புரியும்வண்ணம் பட்டிமன்றங்களைத் தரம் குறையாமல் எளிமையாக நடத்தி, தமிழ்த் தொண்டாற்றிவருபவர். பல ஆய்வு நூல்களையும் எழுதியிருக்கிறார்.
இந்தநிலையில், இந்த ஆண்டு சாலமன் பாப்பையாவுக்கு பத்மஸ்ரீ விருதை மத்திய அரசு அறிவித்திருக்கிறது.
இந்தத் தகவல் கிடைத்தவுடன் நேற்று முதல் மதுரையைச் சேர்ந்த கல்வியாளர்கள், முக்கியப் பிரமுகர்கள், பொதுமக்கள் சாலமன் பாப்பையாவுக்கு நேரில் சென்று வாழ்த்து சொல்லிவருகிறார்கள்.
Also Read: "எனக்கு பத்மஶ்ரீ விருது அந்த இருவர் போட்ட பிச்சை!"- சாலமன் பாப்பையா
மதுரை தி.மு.க பிரமுகர்கள், கோ.தளபதி, ஜெயராம், அன்புநிதி, டாக்டர் சரவணன் போன்றோர் சாலமன் பாப்பையாவுக்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனர்
ஆனால், இந்தப் பெருமையான விஷயத்தை பெரிதும் கொண்டாடியிருக்க வேண்டிய ஆளும்கட்சி அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், இந்த விவகாரத்தைக் கண்டுகொள்ளாதது விமர்சனத்துக்குள்ளாகியிருக்கிறது. அ.தி.மு.க முக்கியப்புள்ளிகள் ஜெயலலிதா நினைவிடத் திறப்பு விழாவுக்குச் செல்லும் ஏற்பாட்டில் இருந்ததால், சாலமன் பாப்பையாவை மறந்துவிட்டதாகச் சொல்கிறார்கள். மாவட்ட நிர்வாகமும் இதைக் கண்டுகொள்ளவில்லை. அரசியல் கடந்து கொண்டாடப்பட வேண்டியவர் சாலமன் பாப்பையா.
source https://www.vikatan.com/news/politics/dmk-cpim-wishes-solomon-pappaiah-for-padmashree
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக