Ad

சனி, 2 ஜனவரி, 2021

மதுரை: `மக்களுக்காக பணியாற்றியவர் அழகிரி; தி.மு.க-வில் பெரிய மாற்றம் ஏற்படும்!' - ஜி.கே.வாசன்

``வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் ரஜினிகாந்த் நல்லவர்களுக்கு குரல் கொடுக்க வேண்டும் என்பது எனது எண்ணம்" என மதுரை வந்திருந்த ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார்.

ஜி.கே.வாசன் கட்சியினருடன்

மதுரை வந்திருந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் செய்தியாளர்களிடம் பேசும்போது, ``50 ஆண்டுகள் திராவிட ஆட்சிகள் மாறி மாறி நடந்தது. அதில் வரப்பிரசாதமாக அ.தி.மு.க ஆட்சியில் மிகப்பெரிய முன்னேற்றத்தை தரக்கூடிய எய்ம்ஸ் மருத்துவமனை மதுரைக்கு வந்திருப்பது பெருமையாக உள்ளது.

மதுரை மட்டுமல்லாது பல்வேறு மாவட்டங்கள் இதனால் பயன்பெறும். இதன் கட்டமைப்புப் பணிகளை மத்திய மாநில அரசுகள் விரைவுபடுத்த வேண்டும்.

அதுபோல் மதுரை விமான நிலையத்தின் விரிவாக்க பணிகளையும் விரைவுபடுத்த வேண்டும். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை மதுரை நகருக்கு மத்திய அரசு கொடுத்துள்ளது.

ஜி.கே.வாசன்

டெல்லியில் பல்வேறு மாநிலத்தைச் சேர்ந்த விவசாயிகள் போராடி வருகிறார்கள். மத்திய அரசு பலமுறை பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. சமீபத்தில் நடத்திய பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. வருகிற 4-ம் தேதி நடைபெறும் பேச்சுவார்த்தை சுமூகமாக முடிய வேண்டும் என விரும்புகிறேன்.

அப்பாவி விவசாயிகளை எதிர்கட்சிகள் தூண்டிவிட்டு விவசாயிகளுடன் தரகர்களை கைகோர்த்து விட்டுள்ளது. மூன்று நாள்களுக்கு முன்பு முதல்வர் பேசும்போது, சென்ற நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க-வுடன் இருந்த கட்சிகள் அதே கூட்டணியில் இருக்கிறது என்று கூறியுள்ளார்.

கட்சி நிர்வாகியின் கடையில்

தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கும் வேளையில் கூட்டணி தர்மத்துடன் நடப்பார்கள் என நம்புகிறேன். அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்து முதல்வர் வேட்பாளராக எடப்பாடியை அறிவித்துவிட்டார்.

எங்கள் முதல் குறிக்கோள், அ.தி.மு.க கூட்டணி தமிழகத்தில் மீண்டும் வெற்றி பெற வேண்டும் என்பதுதான். அந்த கூட்டணியில் நாங்கள் இருக்கிறோம். தி.மு.க, கிராமசபை கூட்டம் நடத்துவது தேவையற்றது என்பதுதான் மக்களின் எண்ணமாக உள்ளது.

தேவையில்லாத கூட்டத்தை மக்களிடம் திணிக்கும்போது மக்கள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை என்பது இன்று (நேற்று) நடைபெற்ற சம்பவம் மூலம் தெரிகிறது.

Also Read: கோவை: `அவங்களை வெளிய அனுப்புங்க’ - அ.தி.மு.க பெண் நிர்வாகியிடம் கொதித்த ஸ்டாலின்... என்ன நடந்தது?

ஜி.கே.வாசன் கட்சியினருடன்

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் என்ற முறையில் சொல்கிறேன், வருகின்ற தேர்தலில் எங்களது சின்னத்தில்தான் போட்டியிடுவோம்.

ரஜினிகாந்த் என் மரியாதைக்குரியவர். உடல் நலம் சரியில்லாததால் இயக்கத்தை ஆரம்பிக்க வில்லை என்று அறிவித்துவிட்டார்.

அதை சுட்டிக்காட்டி தவறாக பேச ஒன்றுமில்லை. ஆனால், அவர் மீது அளவுக்கு அதிகமான எதிர்பார்ப்பு இருந்தது என்பதில் மாற்று கருத்து கிடையாது.

கட்சி நிர்வாகியின் கடையில்

வருகின்ற தேர்தலில் ரஜினிகாந்த் நல்லவர்களுக்கு துணை நிற்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். தேர்தல் நெருங்கும்பொழுது அந்த முடிவை எடுப்பார் என நம்புகிறேன். மு.க.அழகிரி ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளார். அதனால் தி.மு.க-வில் பெரிய மாற்றம் ஏற்படும் என்பதில் எந்தவித மாற்றமுமில்லை. மதுரை மக்களுக்கு சிறப்பாகப் பணியாற்றியவர் அழகிரி. மத்திய அமைச்சராகவும் தமிழக மக்களுக்கு வளர்ச்சிக்கு அரும்பாடுபட்டார் என்பதில் மாற்று கிடையாது" என்றார்.

Also Read: வடமாவட்டங்கள் டார்கெட்; ஆளுங்கட்சியின் சைலன்ட் சப்போர்ட்? - உற்சாகத்தில் அழகிரி ஆதரவாளர்கள்



source https://www.vikatan.com/news/politics/gk-vasan-press-meet-at-madurai

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக