கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே உள்ள சிதறாமல் பின்னமூட்டுவிளையைச் சேர்ந்த பர்னபாஸ் மகன் ஜினிகுமார். இவர் சென்னை பூக்கடை காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்து வருகிறார். இவருக்கும், குமரி மாவட்டம் நட்டாலத்தைச் சேர்ந்த ஷெலின் ஷீபாவுக்கும் கடந்த 2011-ம் ஆண்டு ஜனவரி மாதம் 29-ம் தேதி திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு ஷிஷன்சிங் (9), ஷைஷா (6) ஆகிய இரண்டு குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில் சென்னையில் இருந்து மனைவி மற்றும் குழந்தைகளைப் பார்க்க வந்த ஜினிகுமார், அன்று இரவு தனது வீட்டில் தூங்கியிருக்கிறார். மறுநாள் காலையில் வீட்டில் பார்த்தபோது அவரைக் காணவில்லை. இதனால், அவரது தந்தை பர்னபாஸ் வீடுமுழுவதும் தேடியுள்ளார். அப்போது ஜினிகுமார் தன் கைப்பட 22 பக்கத்திற்கு கடிதம் எழுதி வைத்ததை அவரது தந்தை கண்டுபிடித்துள்ளார். கடிதம் எழுதி வைத்துவிட்டு மகன் திடீரென மாயமாகியுள்ளது குறித்து பர்னபாஸ் அருமனை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். காவல் நிலையத்தில் 22 பக்கக் கடிதத்தையும் ஒப்படைத்தார்.
அந்த கடிதத்தில், ``என் பெற்றோர் செங்கல் சூளையில் வேலை செய்து என்னை ஆளாக்கினாகள். வறுமை காரணமாக பெற்றோர் என்னை 12-ம் வகுப்பு வரைதான் படிக்க வைத்தனர். அதன்பிறகு நான் தனிப்பட்ட முறையில் படித்து காவலர் தேர்வு எழுதி, நான் மிகவும் நேசித்த போலீஸ் பணியில் சேர்ந்தேன். எனக்குத் திருமணமான சிறிது நாள்களில் மாமனார் வீட்டில் விருந்துக்குச் சென்றபோது, என் மனைவி அவரது தாயாரின் சொல்கேட்டு நடந்ததால், அவமானபடுத்தப்பட்டேன். என் மனைவி அவரது அம்மாவின் பேச்சைக் கேட்டு நடந்ததால் எங்களுக்குள் கருத்து வேறுபாடு எழுந்தது.
Also Read: `போலீஸ் ஸ்டேஷனில் பைக்குகளைத் திருடியது ஏன்?’ - கூடங்குளம் பெண் காவலர் வாக்குமூலம்
முதலில் மனைவி என்னிடம் அன்பாக நடந்துகொண்டார். இதனால் நான் என் பெயரிலும், மனைவி பெயரிலும் சொத்து வாங்கினேன். அன்பான மனைவி அவரது அம்மாவின் பேச்சைக் கேட்டு என் பணத்தின் மீதும், சொத்து மீதும் கொண்ட ஆசையால் என்னை மதிக்காமல் நடந்துகொண்டார். என் மனைவி என்னிடம் சொல்லாமல் குழந்தைகளுடன், தனது தாய் வீட்டுக்கு போய்விட்டார். சென்னையில் இருந்து விடுப்பு பெற்றுவிட்டு கடந்த 6-ம் தேதி நட்டாலத்தில் உள்ள அவரது தாய் வீட்டுக்கு, என் மனைவி மற்றும் பிள்ளைகளைப் பார்க்க சென்றேன்.
அப்போது மனைவி மற்றும் மைத்துனர், மாமியார் லலிதா உள்ளிட்டோர், என் பெயரில் உள்ள சொத்துகளை மனைவி பெயரில் எழுதிவைக்கக் கூறி கட்டாயப்படுத்தினர். அதற்கு சம்மதிக்காததால், என்னைத் தாக்கினார்கள். கையைப் பிடித்து வைத்துக்கொண்டு செருப்பால் என்னை அடித்தனர். எனவே நான் என் வாழ்க்கையை முடித்துக்கொள்ள போகிறேன். அப்பா, நீங்கள் சட்டபூர்வமாக சொத்துகளை உரிமையாக்கி உங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள்" என அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. அவரது மொபைல் எண் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளது. புகாரின்பேரில் அருமனை போலீஸார் ஜினிகுமாரை தேடி வருகின்றனர்.
source https://www.vikatan.com/news/crime/police-personnel-absconding-over-family-issue-in-kanyakumari
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக