திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ளது தென்னம்பட்டி கிராமம். இங்கு பல ஆண்டுகளாக டீக்கடை வைத்து நடத்திவருகிறார் முரளி. இந்நிலையில், டீக்கடைக்கு வந்த அதே கிராமத்தைச் சேர்ந்த அம்மாவாசி என்பவர், டீ கேட்டுள்ளார். கடையில் இருந்த முரளியின் மனைவி, ஏற்கெனவே அம்மாவாசி கொடுக்க வேண்டிய 150 ரூபாய் பாக்கியைக் கேட்டுள்ளார். `பிறகு தருகிறேன்’ என அம்மாவாசி கூற, `பணத்தைக் கொடுத்தால் தான் டீ தருவேன்’ என முரளியின் மனைவி கூறியுள்ளார்.
அம்மாவாசிக்கும், முரளியின் மனைவிக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இந்நிலையில், கடைக்கு வந்த முரளி, தன்னுடைய மனைவிடம் வாக்குவாதம் செய்துகொண்டிருந்த அம்மாவாசியிடம் சத்தம் போட்டு அங்கிருந்து போகச் சொல்லியுள்ளார்.
Also Read: `சந்தேக நபரைப் புகைப்படம் எடுத்தாலே போதும்!' - திண்டுக்கல் காவல்துறையில் FACETAGR செயலி
அப்போதும் அம்மாவாசி தொடர்ச்சியாக வாக்குவாதம் செய்ய, ஒரு கட்டத்தில் டீ கடையில் இருந்த மண்வெட்டியின் கைப்பிடியை எடுத்து அம்மாவாசியின் தலையில் அடித்துள்ளார் முரளி. இதில், அம்மாவாசியின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது.
Also Read: திண்டுக்கல்: `இயேசுநாதரைச் சுட்ட கோட்சே வாரிசு மாதிரி..!’ - சர்ச்சையான அமைச்சர் சீனிவாசன் பேச்சு
இதனால் ஆத்திரமடைந்த அம்மாவாசி, முரளியுடன் சண்டையிட ஆரம்பித்தார். இருவரும், ரோட்டில் கட்டிப்புரண்டு சண்டையிட்டுக்கொண்டனர். இதில், இருவரும் படுகாயமடைந்தனர். இச்சம்பவத்தை கண்ட அக்கம் பக்கத்தினர், இருவரையும் விலக்கி விட்டு, காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த வடமதுரை காவல்துறையினர், இருவரையும் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். இருவரிடமும் புகார்கள் பெற்று, இருவர் மீதும் தனித்தனியாக வழக்கு பதிவு செய்தனர்.
இச்சம்பவத்தின் வீடியோவை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள நெட்டிசன்கள், வடிவேல் காமெடியை நினைவுபடுத்தி கலாய்த்து வருகின்றனர்.
source https://www.vikatan.com/news/tamilnadu/dindigul-tea-shop-owner-and-customer-clash-over-credit
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக