Ad

செவ்வாய், 8 டிசம்பர், 2020

கௌதமுடன் காபி, சித்தார்த்திடமிருந்து வந்த கால்... அபியின் ஆபிஸில் நடப்பது என்ன? #VallamaiTharayo

அபியின் குழந்தைகள் வாட்ச்மேன் மனைவியின் துணையோடு வீட்டில் இருக்கும்போது, அப்பார்ட்மென்ட் செகரட்டரி வருகிறார். `வாட்ச்மேனைக் காணோம், பின்பக்கம் சுத்தம் செய்யவில்லை, வீட்டுவேலை செய்வதற்கா உங்களை வேலைக்கு வைத்திருக்கிறோம்’ என்று வாட்ச்மேன் மனைவியைத் திட்டுகிறார். வேறு வழியின்றி அந்த அம்மா, விரைவில் வந்துவிடுவதாகக் குழந்தைகளிடம் சொல்லிவிட்டுச் செல்கிறார்.

Vallamai Tharayo

அப்போது சித்தார்த் போன் செய்கிறான். ``நானும் தம்பியும் பத்திரமா இருக்கோம். அம்மாவை நான்தான் வேலைக்குப் போகச் சொன்னேன். ஒண்ணும் பிராப்ளம் இல்ல. வாட்ச்மேன் ஆன்ட்டி இவ்வளவு நேரம் இங்கேதான் இருந்தாங்க. வந்துடுவாங்க” என்று மகள் சொல்லிக்கொண்டிருக்கும்போதே காலிங் பெல் அடிக்கிறது.

ஜன்னல் வழியாகப் பார்க்கும் குழந்தை, கேஸ் சிலிண்டர் வந்திருப்பதாகச் சொல்கிறது. `திறக்காதே, அடுத்த வாரம் வரச் சொல்லிவிடு’ என்று சித்தார்த் எவ்வளவோ சொல்லியும் குழந்தை கேட்கவில்லை. கதவைத் திறந்து சிலிண்டரை வாங்கி வைக்கிறாள்.

சித்தார்த்துக்கு மட்டுமல்ல... நமக்கும் படபடப்பு அதிகமாகிவிட்டது. நாட்டில் நடைபெறும் விஷயங்கள் நம்மை அவ்வளவு பயம் கொள்ள வைத்திருக்கின்றன. ஒரு பிரச்னையும் இன்றி சிலிண்டர் டெலிவரிமேன் சென்ற பிறகே நிம்மதி பிறந்தது. `இனி யார் வந்தாலும் இப்படித் திறந்துவிடக் கூடாது’ என்று மகளுக்கு எச்சரிக்கை செய்துவிட்டு போனை வைக்கிறான். அபி விஷயத்தில் மோசமாக இருக்கும் சித்தார்த், குழந்தைகள் விஷயத்தில் முறையாகவே நடந்துகொள்கிறான்.

Vallamai Tharayo

அபியை காபி சாப்பிட அழைத்துச் செல்கிறான் கெளதம். சக பெண்கள் எல்லாம் ஆச்சர்யமாகவும் பொறாமையாகவும் பார்க்கிறார்கள். ஒரு பெண், `இந்த வாரம் டேட்டிங் வா’ என்று அழைக்கிறாள். `ஐ.டி நிறுவனம் என்றாலே இப்படித்தான்’ என்கிற ஒரு தவறான பிம்பத்தை இந்தக் காட்சி சித்திரிக்கிறது. எல்லா இடங்களிலும் இருக்கும் பிரச்னைகள் இங்கும் இருக்கும். அதற்காக ஐடியில் வேலை செய்யும் பெண்கள் ஆண்களுக்காக அலைவது போலவும் டேட்டிங் செல்ல அழைப்பது போலவும் சித்திரிக்க வேண்டுமா, என்ன? அப்படித்தான் ஹீரோயின் அபியின் குணத்தை உயர்த்திப் பிடிக்க வேண்டுமா?

``நான் யாரோடும் இப்படி காபி சாப்பிட்டதில்லை. அதான் எல்லோரும் இப்படிப் பண்றாங்க. பஸ்ல பார்த்தப்ப எவ்வளவு நல்லா பேசினீங்க. அதுக்காகத்தான் கூப்பிட்டேன். பேசுவதில் உங்களுக்கு ஒண்ணும் பிரச்னை இல்லையே... நம்ம மீட் பண்ணினதை நீங்க சித்தார்த்கிட்ட சொல்லலையா? நானும் அன்னிக்கு ரொம்ப அக்கறை காட்டியிருக்கக் கூடாது. யாருக்காக இருந்தாலும் கோபம் வரும்தானே?” என்கிறான் கெளதம்.

Vallamai Tharayo

``அதுக்காக சாரி கேட்கணும் நினைச்சேன். அவருக்கு வொர்க் டென்ஷன். நீங்க தப்பா எடுத்துக்காதீங்க” என்று சொல்லிக்கொண்டிருக்கும்போது சித்தார்த்திடமிருந்து கால் வருகிறது. தனியாகப் பேசச் செல்கிறாள் அபி.

என்ன சொல்லப் போகிறானோ?

இன்று இரவு 7 மணிக்குப் பார்க்கலாம்!

- எஸ்.சங்கீதா


source https://cinema.vikatan.com/web-series/vallamai-tharayo-digital-daily-series-review-for-episode-32

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக