Ad

செவ்வாய், 8 டிசம்பர், 2020

நாகூர்: தொடர் கனமழை... சமீபத்தில் கட்டப்பட்ட தர்கா குளம் சுற்றுச்சுவர் சரிந்தது!

தமிழகத்தின் பிரசித்திபெற்ற வழிபாட்டுத் தலமான நாகூர் தர்காவின் மினாரா குளம், இடைவெளியற்ற கனமழையால்  நிரம்பியது கண்டு  அப்பகுதி மக்கள் மகிழ்ந்தனர். மறுநாளே குளத்தின், சுற்றுச் சுவர் இடிந்து விழுந்து குளத்துக்குள் மூழ்கியதால் தற்போது  வேதனை அடைந்துள்ளனர்.

தர்கா குளம் சுற்றுச்சுவர் சரிந்தது

சமீபத்தில் கட்டப்பட்ட சுற்றுச் சுவர் ஏன் இடிந்து விழுந்தது என நாகூர்வாசிகள் சிலரிடம்  கேட்டோம்.  "இந்தக்  குளம் நாகூர் தர்காவுக்கு சொந்தமானது. ரூ.1.5 கோடி நிதியில் இந்தக்  குளத்தின் சுற்றுச் சுவர் கட்டப்பட்டது. சுற்றுச்சுவர் கட்டுமானத்துக்கு கால்பங்கு நிதியை தர்காவும், மீதியை அரசும் தந்தன. முன்பெல்லாம் ஆற்று நீரால், நாகூர் பெருமாள் கோயில் குளம் நிரம்பும். அடுத்தடுத்து குளங்கள் நிரம்பி, வாய்க்கால் வழியாக தர்கா குளமும் நிரம்பும். தர்கா குளத்துக்கு தண்ணீர் வரும் பாதையை தனியார் பலர் ஆக்கிரமித்து விட்டனர். அதனால், தற்போது மழை பெய்தால் மட்டுமே  தர்கா குளம் நிரம்பும்.  குளத்துக்குள் நீர் ஊறுவதற்கு ஊருணிகள் உள்ளன. அதை பலரும் மூடி வீடுகளைக் கட்டிவிட்டனர்.

இந்த சுற்றுச் சுவருக்கான காண்டிராக்டை எடுத்தவர் எம்.எல்.ஏ ஒருவரின் உறவினராவார். சுவர் கட்டுவதற்கான வழிகாட்டல், விதிமுறைகளை பொதுப்பணித்துறை தந்தது. இதில் ஒன்று கூட பின்பற்றப்படவில்லை. ஆழமான அஸ்திவாரம், பைல் பவுண்டேஷன் போட்டு சுற்றுச் சுவரைக் கட்டியிருந்தால் சரிந்திருக்காது. ஏற்கெனவே இருந்த மண்சுவர் மீது கான்க்ரீட் பெல்ட் அமைத்து, அந்த பெல்ட் மீது சுவரைக் காட்டியதால், மழை வெள்ளத்தில் சுவர், மண்ணோடு நழுவி குளத்துக்குள் சரிந்து விட்டது.

தர்கா குளம் சுற்றுச்சுவர் சரிந்தது

சுற்றுச் சுவருக்கு ஒதுக்கிய ரூபாய் ஒன்றரை கோடி நிதியை அப்படியே செலவு செய்யவில்லை.  குளத்தின் நடுவில் மினாரா கட்டினர். இது தேவையற்ற செலவு. வரம்பற்ற மழைநீர்  குளத்தில் நிரம்பி, வெளியேற வழியில்லை. வெளியிலிருந்து வந்த நீரும் குளத்தை நிரப்பி அலையடித்தது. கொள்ளளவு மீறியதால் குளத்து சுவர் குப்புற விழுந்து விட்டது. 

நகராட்சி, பொதுப்பணித்துறை, நகரமைப்பு அதிகாரிகள் இது குறித்து சட்டை செய்யவும் இல்லை” என்றனர்.



source https://www.vikatan.com/news/tamilnadu/wall-of-nagoor-pond-falls-because-of-heavy-rain

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக