Ad

புதன், 23 டிசம்பர், 2020

அபியை டிராப் செய்யும் கௌதம்... வீட்டில் கடுப்புடன் சித்தார்த்... என்ன நடக்கும்? #VallamaiTharayo

அபியும் பெனிடாவும் வீட்டுக்குக் கிளம்பும்போது அவசரமாக ஒரு புரொபோசலை ரெடி பண்ணிக் கொடுக்கச் சொல்கிறார் வீணா. நீண்ட நாள் எடுக்கக்கூடிய ஒரு வேலையை சில மணி நேரத்தில் எப்படி முடிக்க முடியும் என்று யோசித்துக்கொண்டிருக்கும்போது, கெளதம் வருகிறான். அவனும் இதைக் கேட்டு அதிர்ச்சியடைகிறான்.

``எனக்குப் புரிஞ்சிருச்சு, போன வாரம்`அபி செஞ்ச புரொபோசல் நல்லா இருந்தது’னு ஆர்.கே சொன்னார். அதைத் தாங்கிக்க முடியாமதான் வீணா இப்படிப் பண்றா. இது அபிக்கு வச்ச செக். முடிக்கலைன்னா பிரச்னையாயிரும்” என்கிறாள் பெனிடா.

Vallamai Tharayo

வழக்கம்போல் தான் உதவுவதாகச் சொல்லி, இருவரையும் வேலை செய்யச் சொல்கிறான் கெளதம். `வீட்டுக்கு வர நேரமாகும்’ என்பதைச் சொல்வதற்காக அபி பல முறை போன் செய்தும் சித்தார்த் எடுக்கவில்லை. வேறுவழியின்றி ஹர்ஷிதாவிடம் சொல்லி, சித்தார்த்தைப் பார்க்கச் சொல்கிறாள் அபி.

``அபி போன் பண்ணினப்ப நீங்க எடுக்கலையாம். அவங்க வர லேட்டாகுமாம். சாப்பிட்டீங்களா?” என்று சித்தார்த்திடம் கேட்கிறாள் ஹர்ஷிதா.

``பிஸியா இருந்தேன். பொறுப்பான அப்பாதான். எல்லாரும் சாப்பிட்டாச்சு. நீங்க கிளம்புங்க” என்கிறான் சிடுமூஞ்சி சித்தார்த்.

மீண்டும் அபி போன் செய்யும்போது, ``குழந்தைகளைப் பத்தி உனக்கு என்ன கவலை?” என்று கேட்டுவிட்டு, அழைப்பைத் துண்டிக்கிறான் சித்தார்த்.

குழந்தைகள் அவர்களின் அப்பாவோடு வீட்டிலிருக்கும்போதுகூட ஒரு பெண் அலுவலக வேலையாகத் தாமதமாக வரக் கூடாது. அப்படி வந்தால் அவளுக்குப் பொறுப்பில்லை என்று சித்தார்த் நினைப்பது எவ்வளவு அநியாயம்? அவன் வேலைக்குச் செல்லும்போதும் குழந்தைகளின் பொறுப்பை எடுத்துக் கொள்ளவில்லை.

Vallamai Tharayo

வீட்டிலிருக்கும்போதாவது அந்தப் பொறுப்பை மகிழ்ச்சியாகச் செய்யக் கூடாதா? முக்கியமான வேலையை அலுவலக நேரம் கடந்து செய்யும்போது சித்தார்த் கொஞ்சமாவது அக்கறை காட்ட வேண்டாமா? வீடு, குழந்தைகள் என்று எவ்வளவு அழுத்தங்களுடன் பெண்கள் வேலைக்குச் செல்ல வேண்டியிருக்கிறது!

மூவரும் சேர்ந்து வேலையை முடிக்கிறார்கள். கெளதமுக்கு நன்றி சொல்கிறாள் அபி. இப்படி சப்போர்ட் செய்வதற்காகத்தான் தன்னை இந்தப் பொறுப்பில் வைத்திருக்கிறார்கள் என்பதால் நன்றி சொல்ல வேண்டாம் என்கிறான் கெளதம்.

அபிக்காக வந்த கேப் டிரைவர் குடித்திருக்கிறார் என்பதால், தன்னுடன் காரில் வரச் சொல்கிறான் கெளதம். சித்தார்த்திடம் கிடைக்காத சின்னச் சின்ன அக்கறை, கெளதம் மூலம் கிடைக்கும்போது அன்பு உருவாவது இயல்பு.

கெளதம் டிராப் செய்வதைப் பார்த்தால் சித்தார்த் என்ன சொல்வானோ?

இன்று இரவு 7 மணிக்குப் பார்க்கலாம்!

- எஸ்.சங்கீதா



source https://cinema.vikatan.com/web-series/vallamai-tharayo-digital-daily-series-review-for-episode-42

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக