ஆயிரம் கோடியில் நாடாளுமன்றம் யாரைக்காக்க?
கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்து பாதி இந்தியா பட்டினி கிடக்கையில் ஆயிரம் கோடியில் நாடாளுமன்றம் கட்டுவது யாரைக்காக்க என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
ரூ.971 கோடி செலவில் பழைய நாடாளுமன்றக் கட்டடம் அருகே கட்டப்பட உள்ள புதிய நாடாளுமன்றக் கட்டடத்துக்கு பிரதமர் மோடி கடந்த 10-ம் தேதி அடிக்கல் நாட்டினார். இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்திருந்தது. இந்தநிலையில், புதிய நாடாளுமன்றக் கட்டடம் கட்டும் மத்திய அரசுக்கு ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள கமல், ``சீனப்பெருஞ்சுவர் கட்டும் பணியில் ஆயிரக்கணக்கான மக்கள் மடிந்து போனார்கள். மக்களைக் காக்கத்தான் இந்தச் சுவர் என்றார்கள் மன்னர்கள். கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்து பாதி இந்தியா பட்டினி கிடக்கையில்,ஆயிரம் கோடியில் பாராளுமன்றம் கட்டுவது யாரைக்காக்க? பதில் சொல்லுங்கள் என் மாண்புமிகு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமரே....’’ என்று அவர் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
source https://www.vikatan.com/news/general-news/13-12-2020-just-in-updates
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக