Ad

சனி, 5 டிசம்பர், 2020

`விட்டுக் கொடுக்கவும் மாட்டோம்.. விலகிப் போகவும் மாட்டோம்!’ - அ.ம.மு.க-வின் அதிரடி போஸ்டர்

மறந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நான்காம் ஆண்டு நினைவு தினம் \இன்று அனுசரிக்கப்படுகிறது. நினைவு தினத்தை ஒட்டி, மெரினாவில் உள்ள அவரின் நினைவிடத்தில் பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் மரியாதை செலுத்தி வருகிறார்கள். அதுமட்டுமில்லாது தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் அவரின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகிறார்கள். இதன் தொடர்ச்சியாக அவரின் நினைவு தினத்துக்குப் பலரும் போஸ்டர்கள் ஒட்டி வருகிறார்கள்.

அ.ம.மு.க போஸ்டர்

அந்த வகையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் ஒட்டப்பட்ட போஸ்டர் பரபரப்பை கிளப்பியுள்ளது. அந்த போஸ்டரில், ``விட்டுக்கொடுக்கவும் மாட்டோம். விலகிப் போகவும் மாட்டோம்" என்ற வசனங்களோடு சென்னையின் பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. சசிகலா விரைவில் விடுதலையாகக்கூடும் என்று கூறப்படும் நிலையில், இந்த போஸ்டரில் எழுதப்பட்டுள்ள வசனங்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகிறது.

அ.ம.மு.க போஸ்டர் மீது ஒட்டப்பட்ட அ.தி.மு.க போஸ்டர்

அதே நேரத்தில், அ.ம.மு.க சார்பில் ஒட்டப்பட்ட போஸ்டர்கள் மீது அ.தி.மு.க சார்பில், `ஒரு தாயின் சபதம்’ என்ற வசனத்துடன் அடிக்கப்பட்ட பெரிய போஸ்டர்கள் பல இடங்களில் ஒட்டப்பட்டிருக்கிறது. இதன் மூலம் அ.ம.மு.க சார்பில் ஒட்டப்பட்ட போஸ்டரை மறைக்கும் நோக்கில் அ.தி.மு.க போஸ்டரை ஒட்டி வருகிறதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.



source https://www.vikatan.com/government-and-politics/politics/we-will-not-give-up-ammk-poster-on-jayalalitha-death-anniversary

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக