சென்னை மாநகராட்சி பகுதியில் உள்ள 5.3 லட்சம் குடிசை பகுதிகளில் வாழும் 26 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களுக்கு, இன்று காலை முதல் வரும் 13.12.2020 தேதி வரை மாநகராட்சி சார்பில் மூன்று வேளையும், சுத்தமான, சுகாதாரமான சமைக்கப்பட்ட உணவு வழங்க, தமிழக முதல்வர் அறிவுறுத்தியிருப்பதாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பை அடுத்து இன்று (06.12.2020) காலை உணவு முதல் வரும் 13.12.2020 தேதி இரவு உணவு வரை தயார் செய்து கொடுக்கும் வேலையை மாநகராட்சி ஊழியர்கள் முழு வீச்சில் செய்துவருகிறார்கள். சென்னையில் உள்ள குடிசை பகுதிகளில் வசிக்கும் 26 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள், தொடர் மழையில் காரணமாகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில். இந்த உணவு வழங்கும் திட்டம் அவர்களுக்கு மிகவும் பயனளிக்கக்கூடும் என்று மாநகராட்சி சார்பில் சொல்லப்படுகிறது.
அரசு உணவு கூடங்களில் உணவு தயார் செய்யும் பணியை மாநகராட்சி ஊழியர்கள் தொடங்கியதுடன், மேற்கொண்டு தேவைப்படும் உணவுகளைஉணவு கூடங்கள் இல்லாத இடங்களிலும் தயார் செய்யும் பணியையும் செய்து வருகிறது. இதற்காக சமூக நல கூடங்கள், அம்மா உணவகங்கள் முதலியவை பயன்படுத்தப்படும் எனக் கூறப்படுகிறது. இதன் மூலம் இன்று முதல் அடுத்த ஒரு வாரத்துக்கு மழை நீரால் பாதிக்கப்பட்டுள்ள குடிசை பகுதி மக்களுக்கு இலவச உணவு வழங்கப்படும்!
source https://www.vikatan.com/government-and-politics/news/chennai-corporation-announces-free-food-for-26-lakh-people
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக