Ad

செவ்வாய், 8 டிசம்பர், 2020

சித்ரா உண்மையிலேயே தற்கொலைதான் செய்துகொண்டாரா... மரணம் குறித்து சந்தேகம் கிளப்பும் நண்பர்கள்?!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' தொடர் மூலம் புகழ்பெற்றவர் சித்ரா. இந்த சீரியலில் இவர் நடித்த 'முல்லை' கதாபாத்திரம் தொலைக்காட்சி ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டது. சீரியல் நல்லபடியாகப் போய்க்கொண்டிருந்த நிலையில், பிப்ரவரியில் திருமணத்துக்கும் தயாரானார் சித்ரா. சில தொழில்கள் செய்துவந்த சென்னையைச் சேர்ந்த ஹேமந்த் என்பவரைத்தான் திருமணம் செய்ய இருந்தார்.

சித்ரா - ஹேமந்த் திருமண நிச்சயதார்த்தம் கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது. இதற்கிடையே திருமணம் குறித்த குழப்பம் சித்ராவுக்கு இருந்ததாக அவருக்கு மிகவும் நெருங்கிய நண்பர்கள் சொல்கிறார்கள். "சில நாட்களுக்கு முன்பு நிச்சயதார்த்தத்தோடு திருமணத்தை நிறுத்திவிடலாம் என்கிற எண்ணத்தில் சித்ரா இருந்தார். அவர் காதுக்கு வந்த சில விஷயங்கள் அவருக்கு இத்திருமணம் குறித்த குழப்பங்களை ஏற்படுத்தியது. அதனால் திருமணத் தேதி குறிப்பதில் சிக்கல்கள் எழுந்தன. இதற்கிடையே ஹேமந்த்தின் வீட்டில் இருந்தும் சீரியலில் இடம்பெற்ற சிலகாட்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தாகச் சொன்னார். திருமணத்தேதி தொடர்பான சர்ச்சை பற்றிப் பேசத்தான் ஹேமந்த் வீட்டினர் பூந்தமல்லி ஹோட்டலுக்கு வந்ததாகத் தெரிகிறது" என்கிறார்கள்.

நடிகை சித்ரா

"கொரோனா பிரச்னையால் ஹேமந்துக்குப் பொருளாதார சிக்கல்கள் இருந்தன. இந்தச் சூழலில் சித்ராதான் அவருக்குச் சில உதவிகள் செய்தார். ஹோட்டலில் எல்லோரும் இருந்தபோதே சித்ரா தற்கொலை செய்துகொண்டது ஏன் என்பது புரியவில்லை. தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு மன அழுத்தத்தில் அவர் இல்லை... மிகவும் பாசிட்டிவான பெண் அவர். முகத்திலும் சில காயங்கள் இருக்கின்றன. போலீஸார் முழுமையாக விசாரிக்கவேண்டும்" என்கிறார்கள் சித்ராவின் நண்பர்கள்.

தற்போது சித்ராவின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் இருக்கிறது. போஸ்ட் மார்ட்டம் முடிந்தால்தான் சித்ரா தற்கொலைதான் செய்துகொண்டாரா அல்லது வேறு ஏதும் நடந்ததா என்பது உறுதியாகும்.


source https://cinema.vikatan.com/television/chithras-friends-raise-doubts-about-her-death

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக