Ad

செவ்வாய், 8 டிசம்பர், 2020

மதுரை: ரெளடிகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்ற கோரிக்கை! - உள்துறை செயலர் பரிசீலனை செய்ய உத்தரவு

பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்ட ரெளடிகள் மீதான வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்க கோரிய மனு மீதான விசாரணையில், உள்துறை செயலர் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தது உயர் நீதிமன்ற மதுரை கிளை.

தமிழகத்தில் பல மாவட்டங்களில் ரெளடிகளின் அட்டகாசம் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. கடுமையான சட்டங்கள் இருந்தாலும் அதற்கு அஞ்சாமல் ரெளடிகள் தொடர்ந்து குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாக குற்றம்சாட்டுகிறார்கள் சமூக நல ஆர்வலர்கள்.

நீதிமன்றம்

இந்நிலையில் மதுரையை சேர்ந்த ரமேஷ் என்பவர் தாக்கல் செய்த பொதுநல வழக்கு ஒன்றில், "கொலை, கொள்ளை, வழிப்பறி, நகை பறிப்பு, கட்டப் பஞ்சாயத்து மற்றும் சட்டவிரோத செயல்கள் தமிழகத்தில் அதிகரித்துள்ளன. கொலைகார கும்பல்கள் தங்களுக்கு கீழ் கூலிப்படை அமைத்து கொலை செய்கின்றனர். ஆனால் காவல்துறையினர் உரிய நேரத்தில் குற்றப்பத்திரிகை பதிவு செய்வதில்லை.

இதனால் அச்சமின்றி மேலும் பல்வேறு குற்றங்களில் ரெளவுடிகள் ஈடுபடுகின்றனர். ரெளடிகள் மீதான வழக்குகளை விரைந்து விசாரித்தால், குற்றம் குறையும். ரெளடிகள் மீதான வழக்குகளை விசாரிக்க மாவட்டம் தோறும் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க வேண்டும். குற்றப்பத்திரிகையை 30 நாட்களில் தாக்கல் செய்ய வேண்டும். ரெளடிகள், சமூக விரோதிகளுடன் நெருக்கமாக உள்ள போலீசார் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என்று மனுவில் தெரிவித்திருந்தார்.

கொலை

இந்த மனுவினை நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வுக்கு முன்பு விசாரணைக்கு வந்தது. அதற்கு நீதிபதிகள் "மனுதாரர் வழக்கு சம்பந்தமான முழுமையான ஆவணங்களை நீதிமன்றதில் தாக்கல் செய்தால் வழக்கு விசாரிக்கப்படும்" என தெரிவித்தனர். மேலும் இந்த மனு குறித்து தமிழக உள்துறை செயலர் பரிசீலனை செய்ய உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனர்.



source https://www.vikatan.com/government-and-politics/judiciary/madurai-high-court-case-on-action-against-rowdies

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக