Ad

புதன், 9 டிசம்பர், 2020

தேனி: சிறுவனின் உயிரைப் பறித்த அரசு கட்டத்திற்காக தோண்டப்பட்ட குழி! - என்ன நடந்தது?

தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே உள்ளது கெங்குவார்பட்டி கிராமம். விவசாயத்தை பிரதான தொழிலாகக் கொண்டுள்ள இப்பகுதியில், விவசாயிகளுக்காக அரசு நெல் கொள்முதல் நிலையம் கட்ட திட்டமிடப்பட்டு, காட்டுரோடு நூல் தோப்பு எனும் பகுதியில் நிலமும் கையக்கப்படுத்தப்பட்டது. சில தினங்களுக்கு முன்னர் அந்த இடத்தில், கட்டடம் கட்டுமானப்பணிகள் துவங்கியது. முதல்கட்டமாக அஸ்திவாரம் அமைக்க குழி தோண்டப்பட்டது.

சிறுவனின் உறவினர்கள்

Also Read: முல்லைப் பெரியாறு மதுரை குடிநீர் திட்டம்... எதிர்க்கும் தேனி விவசாயிகள்... ஏன்?

இந்நிலையில், இன்று காலை, அருகே உள்ள குடியிருப்புப் பகுதியில் வசிக்கும் செந்தில்பாண்டி - ஜோதி தம்பதியின் 5 வயது மகன் ஹரீஸ், விளையாடச் செல்வதாகக் கூறி வீட்டில் இருந்து கிளம்பியுள்ளான். நீண்ட நேரம் கழித்தும் ஹரீஸ் வராத நிலையில், ஜோதி தேடிச் சென்றுள்ளார். அப்போது, நெல் கொள்முதல் நிலைய கட்டுமானப்பணிக்காக தோண்டப்பட்ட குழியில் தேங்கியிருந்த மழை நீரில் ஹரீஸ் விழுந்து இறந்துகிடந்துள்ளான்.

சாலை மறியலில் ஈடுபட்ட சிறுவனின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள்.

Also Read: தேனி: கல்லாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு... குளிக்கச் சென்ற இளைஞர்களுக்கு நேர்ந்த சோகம்!

விளையாடச் சென்ற சிறுவன் குழியில் விழுந்து இறந்ததை அறிந்த சிறுவனின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள், அலட்சியமாக செயல்பட்ட கட்டட ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி, ஹரீஸ் உடலுடன் தேனி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை சமாதானம் செய்துவருகின்றனர் தேவதானப்பட்டி போலீஸார்.

ஹரீஸின் தந்தை செந்தில்பாண்டி கடந்த ஒன்றரை வருடத்திற்கு முன்னர், உடல்நலக்குறைவு காரணமாக இறந்துவிட்ட சூழலில், தற்போது ஹரீஸ் உயிர்ழந்திருப்பது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்த சிறுவன் ஹரீஸ்

தேங்கியுள்ள மழைநீரினால் தொடர்ச்சியாக உயிரிழப்புகள் நடந்துவரும் சூழலில், மழைக்காலத்தில் தண்ணீர் தேங்கும் இடங்களை அரசு கவனத்தில் எடுத்துக்கொண்டு முன்னெச்சரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.



source https://www.vikatan.com/news/tamilnadu/the-pit-dug-for-the-government-stage-that-took-the-life-of-the-boy

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக