ரஜினியின் 'அண்ணாத்த' படத்தின் ஷூடிங் கிட்டத்தட்ட 8 மாத இடைவெளிக்குப்பிறகு நேற்று தொடங்கியது. 50 சதவிகித படப்பிடிப்பு ஏற்கெனவே நிறைவடைந்துவிட்ட நிலையில் மீதி படப்பிடிப்புக்கான பணிகள் தொடங்கியிருக்கின்றன.
'முத்து' படத்துக்குப்பிறகு ஏராளமான நடிகர்கள் நடிக்கும் கிராமத்துக்கதையில் 'அண்ணாத்த' படத்தில் நடிக்கிறார் ரஜினி. 'முள்ளும் மலரும்' படம்போல ரஜினி நடிக்கும் அண்ணண் - தங்கச்சி எமோஷனல் கதை இது. ரஜினிக்குத் தங்கையாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். ரஜினியின் மனைவியாக நயன்தாராவும், ரஜினியின் முறைப்பெண்களாக குஷ்பு, மீனாவும் நடிக்கிறார்கள். முக்கியமான கதாபாத்திரத்தில் லிவிங்ஸ்டன், பிரகாஷ்ராஜ் ஆகியோர் நடிக்கின்றனர். காமெடிக்கு சூரி, சதீஷ்.
'சிறுத்தை' சிவா இயக்கும் 'அண்ணாத்தே' படத்தின் இரண்டு கட்டப்படப்பிடிப்பு ஹைதராபாத்தில் கடந்த பிப்ரவரியிலேயே முடிந்துவிட்டது. இதில் ரஜினி நடித்தக் காட்சிகள்தான் பெரும்பாலும் படம்பிடிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் ரஜினி நடிக்கவேண்டிய மேலும் சில காட்சிகள் புனே மற்றும் கொல்கத்தாவில் படம்பிடிக்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், கொரோனா லாக்டெளன் காரணமாக ஷூட்டிங் நிறுத்தப்பட்டது.
இப்போது முழுக்க முழுக்க ஹைதராபாத்தில் ராமோஜிராவ் பிலிம் சிட்டியிலேயே படத்தின் ஷூட்டிங் முடிக்கப்பட இருக்கிறது. முதல்கட்டமாக ரஜினி நடிக்கவேண்டிய காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட இருக்கின்றன. ஜனவரி 20 வரை ரஜினி இப்படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்வார் எனத்தெரிகிறது.
இதற்கிடையே சன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் தேர்தலுக்கு முன்பாக அதாவது ஏப்ரல் 14 தமிழ்புத்தாண்டுக்கு ரிலீஸ் செய்ய முடியுமா எனக்கேட்டிருக்கிறார். ஆனால், சன் பிக்சர்ஸ் நிறுவனம் தேர்தலுக்குப்பிறகு அதாவது மே இறுதியில்தான் படத்தை ரிலீஸ் செய்யமுடியும் என சொல்லியிருக்கிறது.
ரஜினியைப்போலவே கமல்ஹாசனும் தேர்தலுக்கு முன்பாக 'விக்ரம்' படத்தை வெளியிட திட்டமிட்டிருந்தார். ஆனால், தேர்தலை முன்வைத்து படத்தின் தரத்தில் எதுவும் குறைவைத்துவிடக்கூடாது என முடிவெடுத்து மே-ஜூனில் படத்தை ரிலீஸ் செய்யலாம் எனச் சொல்லியிருக்கிறார் கமல்ஹாசன்.
அதனால், தேர்தலுக்கு முன்பாக ரஜினி, கமல் என இருவரின் படங்களுமே ரிலீஸுக்குத் தயாராகயில்லை.
source https://cinema.vikatan.com/tamil-cinema/rajinis-request-on-annathe-release-date
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக