Ad

புதன், 9 டிசம்பர், 2020

`அமித் ஷா வந்து சென்ற பின்பு அறிவித்தது ஏன்?’ - ரஜினிக்கு இயக்குநர் கெளதமன் கேள்வி

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தமிழ் பேரரசு கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளரும், இயக்குநருமான கெளதமன் கலந்து கொண்டார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கெளதமன், “இந்தியாவில் முதன் முதலாக வெள்ளையர்களை எதிர்த்துப் போராடிய தமிழ் மன்னர் பூலித்தேவனின் வரலாறு திட்டமிட்டு மறைக்கப்படுகிறது. இந்திய சுதந்திரப் போராட்டத்தின் முதல் வீரர் தமிழ் மன்னர் பூலித்தேவன் என்பதை தமிழக அரசு அரசாணையில் வெளியிட வேண்டும்.

கெளதமன்

இதற்கு அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் போராட்டங்கள் நடத்தப்படும். தமிழரல்லாத நடிகர் ரஜினிகாந்தின் ஒரு வியர்வை துளி க்கு ஒரு பவுன் தங்கம் தமிழக மக்கள் கொடுத்த நிலையிலும் தமிழகத்திற்கு துரோகம் செய்யவே அவர் அரசியலுக்கு வருகிறார். கொரோனாவையும், தன் உடல்நிலையையும் காரணம் காட்டி அரசியலுக்கு வர மறுத்தவர், அமித் ஷா வந்து சென்ற பின்பு அரசியலுக்கு வருகிறேன் என்று அறிவித்தது ஏன்?

பா.ஜ.க வின் பின்புலம் இல்லை, வள்ளுவருக்கும் எனக்கும் காவிச் சாயம் பூச முடியாது என்று கூறியவர் பா.ஜ.கவைச் சேர்ந்த அர்ஜுன மூர்த்தியை முதன்மை ஒருங்கிணைப்பாளராக நியமித்து ஏன்? ரஜினிக்காக தாலியை க்கூட அடகு வைத்து கட் அவுட் வைத்த அவரது ரசிகர்களில் ஒருவரைக் கூட வா அவரால் முதன்மை ஒருங்கிணைப்பாளராக அறிவிக்க முடியவில்லை? நடிகை குஷ்புவுக்கு மேலானவர் தமிழருவி மணியன். நடிகை குஷ்பு பிழைப்புக்காக கட்சி மாறுகிறார்.

கெளதமன்

ஆனால் தமிழை அடமானம் வைத்து தமிழகத்தைக் காட்டிக்கொடுக்க நினைப்பவர்தான் தமிழருவி மணியன். ‘போர் வரும் போது வருவேன்’ என்று கூறிய ரஜினி, ஒரு தொகுதியில் போட்டியிடட்டும். ஏற்கனவே கடந்த 2011-ல் நான் சொன்னபடி அவர் எங்கு போட்டியிட்டாலும் அவரை எதிர்த்து, நான் போட்டியிடுவேன்” என்றார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/if-rajinikanth-contests-the-election-i-will-contest-against-him-director-gautaman

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக