Ad

செவ்வாய், 1 டிசம்பர், 2020

`முதலீட்டில் எக்காலத்திலும் பலன் தரும் டெக்னிக் இதுதான்!' - வழிகாட்டும் நாணயம் விகடன்

நாணயம் விகடன் மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் இணைந்து, 'எக்காலத்திலும் பலன் தரும் அஸெட் அலோகேஷன்!’ என்ற ஆன்லைன் நிகழ்ச்சியை நடத்துகிறது.

மியூச்சுவல் ஃபண்ட் நிபுணர் ஶ்ரீகாந்த் மீனாட்சி

இந்த நிகழ்ச்சியில், மியூச்சுவல் ஃபண்ட் நிபுணர் ஶ்ரீகாந்த் மீனாட்சி (Primeinvestor.in), ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் சேனல் ஹெட் - ரீடெய்ல் சேல்ஸ் எம்.கே.பாலாஜி ஆகியோர் கலந்துகொள்கிறார்கள்.

முக்கியமான முதலீடுகள் என்கிறபோது ரியல் எஸ்டேட், தங்கம், ஃபிக்ஸட் டெபாசிட், பங்குச் சந்தை முதலீடுகள் எனக் குறிப்பிடலாம்.

இந்த முதலீடுகள் அனைத்தும் ஒரே நேரத்தில் லாபம் தராது. அதேபோல் ஒரே நேரத்தில் மதிப்பு இறக்கம் காணவும் செய்யாது. பொதுவாக பங்குச் சந்தை ஏற்றம் காணும்போது தங்கத்தின் விலை இறக்கம் காணும்.

பொதுவாக, கெட்ட விஷயங்கள் நடக்கும்போது தங்கத்தின் விலை ஏறிக்கொண்டே செல்லும். உதாரணம், சீனா - அமெரிக்க வர்த்தக போர், கொரோனா பரவல் போன்றவற்றால் தங்கத்தின் விலை வேகமாக ஏறியது.

முதலீடு

பொருளாதார வளர்ச்சி குறையும்போது பங்குச் சந்தை இறக்கும். இதுதான் கொரோனா முழு ஊரடங்கு காலத்தில் நடந்தது. இப்போது அரசுகள் அளித்து வரும் கடன் உதவிகள், சலுகைகளால் பொருளாதார வளர்ச்சி மேம்பட்டு வருகிறது. இதனால், நிறுவனப் பங்குகளின் விலை ஏற்றத் தொடங்கி இருக்கிறது.

இதேபோல், இதர சொத்துப் பிரிவுகளான ரியல் எஸ்டேட், கடன் சந்தை சார்ந்த முதலீடுகளைக் குறிப்பிடலாம்.

எக்காலத்திலும் பலன் தரும் அஸெட் அலோகேஷன்.

ஒரு முதலீட்டாளர், இந்த ரியல் எஸ்டேட், தங்கம், ஃபிக்ஸட் டெபாசிட், பங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட் போன்றவற்றை பிரித்து முதலீடு செய்யும்போது, அவர் எடுக்கும் ரிஸ்க் அளவு குறைகிறது. கூடவே, எப்போதும் ஒரு குறிப்பிட்ட அளவு வருமானத்தை அவரின் முதலீட்டுக் கலவை கொடுப்பதாக இருக்கும்.

பங்குச் சந்தை

இது பற்றிய விரிவான நிகழ்ச்சிதான், எக்காலத்திலும் பலன் தரும் அஸெட் அலோகேஷன்.

இந்த நிகழ்ச்சி டிசம்பர் 6-ம் தேதி காலை 10.30 to 11.30 மணிக்கு நடைபெறும். அனுமதி இலவசம். முன் பதிவு அவசியம்.

பதிவு செய்ய:https://bit.ly/NV-ICICIPru



source https://www.vikatan.com/business/investment/nanayam-vikatan-guidance-event-on-asset-allocation-of-investments

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக