``என் அரசியல் நிலைப்பாடு பற்றி விரைவில் ஆதரவாளர்களுடன் ஆலோசித்து முடிவு எடுப்பேன். வரும் தேர்தலில் எனது பங்ளிப்பு நிச்சயம் இருக்கும்'' என்று மு.க.அழகிரி பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
தி.மு.க மதுரை மாநகரப் பொறுப்புக்குழு உறுப்பினரும், மு.க.அழகிரி ஆதரவாளருமான எஸ்ஸார் கோபியின் சகோதரர் நல்ல மருது கடந்த வாரம் மரணமடைந்தார். அவர் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்ல மு.க.அழகிரி இன்று அவரது வீட்டுக்குச் சென்றார்.
ஆறுதல் சொல்லிவிட்டு வெளியில் வந்தவரிடம் செய்தியாளர்கள்,``புதிய அரசியல் கட்சித் தொடங்குவது எப்போது... உங்கள் அரசியல் நிலைப்பாடு என்ன?’’ என்று கேட்டதற்கு,``என் அரசியல் நிலைப்பாடு பற்றி விரைவில் ஆதரவாளர்களுடன் ஆலோசித்து முடிவு எடுப்பேன்.
வரும் தேர்தலில் எனது பங்ளிப்பு நிச்சயம் இருக்கும்'' என்று அழகிரி பதிலளித்தார். பா.ஜ.க-வில் இணையவிருப்பதாக வரும் தகவல் பற்றிக் கேட்டதற்கு, ``அது வதந்தி'' என்றார்.
Also Read: `அழகிரி தமிழகத்தின் ஒவைசியா... பின்னணியில் பா.ஜ.க?’ - தனிக்கட்சி தகவலால் தகிக்கும் மதுரை
``துரை தயாநிதிக்கு தி.மு.க-வில் பதவி தரவிருப்பதாகத் தகவல் வருகிறதே...'' என்ற கேள்விக்கு, ``அப்படி யார் சொன்னது?’’ என்று மு.க.அழகிரி எதிர்க் கேள்வி கேட்டார்.
இந்தநிலையில், மு.க.அழகிரி தனிக்கட்சி தொடங்கத் திட்டமிட்டு வருவதாகவும், அதைப் பற்றி அவர், தன் முக்கிய ஆதராவாளர்களிடம் பேசிவருவதாகவும், ஜனவரி 30 -ம் தேதி வரும் தனது பிறந்தநாள் விழாவில் அறிவிக்கவிருப்பதாகவும், அவர் ஆதரவாளர்கள் மகிழ்ச்சியுடன் கூறுகிறார்கள்.
source https://www.vikatan.com/news/politics/mkalagiri-speaks-about-various-issues-in-madurai
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக