ஆஸ்திரேலியாவில் கைநிறைய சம்பளத்துடன் வேலை இருப்பதாக இணையதளத்தில் விளம்பரம் செய்யப்பட்டிருந்தது. அந்த விளம்பரத்தில், இந்த வேலைக்கு முதலில் முன்பதிவு செய்ய வேண்டும், குறிப்பிட்ட தொகையை சேவைக்கட்டணமாக செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. முன்னுரிமை அடிப்படையில் வேலை வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
விளம்பரத்தைப் பார்த்தவர்கள், பணத்தைச் செலுத்தி முன்பதிவு செய்தனர். ஆனால் வேலைக்கான அழைப்பு வரவில்லை. அதனால் விளம்பரத்தில் கொடுக்கப்பட்டிருந்த முகவரிக்கு பணத்தை செலுத்தியவர்கள் சென்று பார்த்தனர். அப்போது அந்த நிறுவனம் மூடப்பட்டிருந்தது. அதனால் விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டிருந்த செல்போன் நம்பர்களில் பணம் செலுத்தியவர்கள் தொடர்பு கொண்டனர். அப்போது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.
மேலும் ஆஸ்திரேலியா வேலை என்பதும் போலி எனத் தெரியவந்தது. அதனால் பணத்தை இழந்தவர்கள் என்ன செய்தென்று தெரியாமல் திகைத்தனர். இதில் பாதிக்கப்பட்ட கோடம்பாக்கத்தைச் சேர்ந்த அபின் என்பவர், கோடம்பாக்கம் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் மோசடி கும்பலை தேடிவருகின்றனர்.
Also Read: போன் இணைப்பைத் துண்டித்ததும் சென்னையிலிருந்து நொய்டாவுக்குச் சென்ற பணம்! - அதிரவைத்த மோசடி
இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``சமீபகாலமாக சைபர் க்ரைம் குற்றங்கள் அதிகளவில் நடந்துவருகின்றன. குற்றங்களில் ஈடுபடுவோர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறோம். இருப்பினும் மோசடி கும்பல்களிடம் பொதுமக்கள் எச்சரிக்கையாக வேண்டும். அதிலும் ஆன் லைன் மூலம் வேலை என்று வலைவிரிப்பவர்களிடம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்" என்றனர்.
``ஆஸ்திரேலியா வேலைக்காக பணம் செலுத்தியவர்கள் எத்தனை பேர் என்ற விவரம் தெரியவில்லை. இதுவரை கோடம்பாக்கம் காவல் நிலையத்தில் ஒரே ஒரு புகார் மட்டும் வந்திருக்கிறது" என்றார் போலீஸ் உயரதிகாரி ஒருவர்.
source https://www.vikatan.com/news/crime/youth-complaint-against-online-fraud-in-chennai
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக