Ad

புதன், 2 டிசம்பர், 2020

ஏற்றுமதி - இறக்குமதி வர்த்தகத்தில் சாதித்த தம்பதி... உங்களுக்கும் வழிகாட்ட வருகிறார்கள்!

"வெளிநாடுகளுக்கான ஏற்றுமதி - இறக்குமதி விஷயங்கள் குறித்த விஷயங்களும், சட்ட நுணுக்கங்களும் தெரிஞ்சா போதும். இந்த வர்த்தகத்துல பெரிய அளவுல வெற்றி பெறலாம். இதுகுறித்து வழிகாட்டுவதும் உதவுவதும்தான் எங்க பிரதான வேலை.

உலகின் பெரும்பாலான நாடுகளுக்கும் வர்த்தகம் செய்திருக்கோம். ஒவ்வொரு நாட்டுக்குமான வர்த்தக விஷயங்கள் மாறுபடும். இந்தத் துறையே கடல் போல, சுவாரஸ்யமான நிறைய விஷயங்களை உள்ளடக்கியது"

கிஷோர் - இன்பா தம்பதி

- புன்னகையுடன் பேசும் கிஷோர் - இன்பா தம்பதி, ஷிப்பிங் மற்றும் கிளியரிங் ஏஜென்சி துறையில் முன்னணி தொழில்முனைவோர். இவர்களின் 'ஸீல் ஷிப்பிங் & கிளியரிங் ஏஜென்சி’ நிறுவனத்தின் மூலம் உலகின் பெரும்பாலான நாடுகளுக்கும் வர்த்தகம் நடைபெறுகிறது.

"சினிமா துறையிலிருந்து திசை மாறி இந்தத் துறைக்குள் நுழைஞ்சேன். வேறு துறையில் வேலை செய்திட்டிருந்த மனைவி இன்பா, பிசினஸ் பயணத்துலயும் என்னோடு இணைஞ்சாங்க. சட்ட நுணுக்கங்கள் உட்பட இந்தத் துறைக்கான எல்லா விஷயங்களையும் இருவரும் கத்துகிட்டோம். தவிர, இந்தத் துறைக்குனு தனிப்பட்ட படிப்புகளும் இருக்கு. அதையும் முடிச்சிருக்கோம்.

கிஷோர் - இன்பா தம்பதி

ஏற்றுமதி - இறக்குமதி வர்த்தகத்துல, சம்பந்தப்பட்ட ரெண்டு நாடுகளிலும் உள்ள வர்த்தகம் செய்யவிருக்கும் பொருள் சார்ந்த துறையினர் மற்றும் சுங்கத்துறையினரின் அனுமதி வாங்கணும். இதற்கான வழிமுறைகள் சவாலானவை. அந்தச் செயல்பாடுகளுக்கான எல்லா உரிமங்களையும் வாங்கிக் கொடுப்பதே எங்க பிரதான வேலை" என்று சுருக்கமாக விளக்கமளித்தார் கிஷோர்.

"டெல்லியைச் சேர்ந்த ஒருவர் வெளிநாடுகளிலிருந்து பழைய கார்களை இறக்குமதி செஞ்சு, அதில் கூடுதலான மாற்றங்களைச் செஞ்சு விற்பனை நம் நாட்டில் செய்யறார். இதுபோல, வாகனங்கள் முதல் ராணுவ தளவாடங்கள் வரைக்கும் நூற்றுக்கணக்கான பொருள்களுக்கான ஷிப்பிங் மற்றும் கிளியரிங் பணிகளைச் செய்துகொடுக்கறோம்.

பயிற்சிக்கான அறிவிப்பு

இந்தப் பணிகள்ல கிடைச்ச அனுபவத்துல, நாங்களும் ஏற்றுமதி - இறக்குமதி வர்த்தகத்துலயும் ஈடுபடறோம். இந்த வகையில, செக்கு எண்ணெய் முதல் தேக்கு மர சிற்பங்கள் வரை பல்வேறு பொருள்களையும் ஏற்றுமதி - இறக்குமதி செய்றோம்" என்று புன்னகையுடன் கூறுகிறார் இன்பா. இவர்கள் நிர்வகிக்கும் பல்வேறு தொழில்களிலும், ஆண்டுக்குப் பல கோடி ரூபாய் வர்த்தகம் நடக்கிறது.

இவர்களைப் போல, ஏற்றுமதி - இறக்குமதி தொழிலில் நீங்களும் வெற்றி பெற நினைக்கிறீர்களா?

அவள் விகடன் மற்றும் நாணயம் விகடன் இணைந்து வழங்கும் 'ஏற்றுமதி - இறக்குமதி தொழில்களுக்கான வழிகாட்டுதல் பயிற்சி'யில் கலந்துகொள்ளுங்கள். ஏற்றுமதி - இறக்குமதியாளர் ஆவதற்கான அடிப்படை அனுபவங்கள், ஏற்றுமதி - இறக்கமதி செய்ய உகந்த பொருள்கள், வெளிநாட்டு வர்த்தகத்தை எளிமையாகச் செய்வது, சிக்கல்கள் இன்றி வெளிநாட்டு வர்த்தகங்களைச் செய்வது உட்பட இந்தத் தொழிலுக்கான அனைத்து தகவல்கள் குறித்தும் கிஷோர் - இன்பா தம்பதி வழிகாட்ட இருக்கின்றனர்.

டிசம்பர் 20-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணி முதல் 6 மணி வரை பயிற்சி நடைபெறும்.

பயிற்சிக்கான கட்டணம் ரூ.300.

ஆன்லைனில் நடைபெறும் இந்தப் பயிற்சியில் கலந்துகொள்ள முன்பதிவு அவசியம்.

இந்தப் பயிற்சியில் கலந்துகொள்ள, இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்.

https://bit.ly/2JiW2U4



source https://www.vikatan.com/business/women/aval-vikatan-online-event-on-export-and-import-business-strategies

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக