''என்னோட வாழ்க்கையில நான்தான் மாறன்னு சொல்லலாம். ஏன்னா, 'சூரரைப் போற்று' படத்துல சூர்யா, அவருடைய அப்பா சாவுக்குப் போக முடியாம தவிப்பார். அதே மாதிரி என்னோட வாழ்க்கையிலும் நடந்திருக்கு. என்னோட முதல் சபா கச்சேரி ராஜா அண்ணாமலை செட்டில நடந்ததுச்சு. நானும் என்னோட ஃப்ரெண்டு பாலாஜியும் நடத்தினோம். அப்போ, என்னோட அப்பா இறந்துட்டார்னு தகவல் வந்தது. என்னால சென்னையில இருந்து புதுக்கோட்டைக்கு பஸ்ஸூக்கு காசு இல்லாம போக முடியல. அதுவும் வெறும் அறுபது ரூபாய் காசு கையிலே இல்லைனு நின்னுட்டு இருந்தேன். என்னை மாதிரி நிறையப் பேருக்கு இப்படி நடந்திருக்கும். கமர்ஷியல் படமா மட்டும் இல்லாம ரொம்ப எமோஷனலான படம் 'சூரரைப் போற்று'.
Also Read: தியேட்டருக்குக் கூட்டம் வந்துச்சா... சூரரைப் போற்று ஹிட்டா..?!
சென்னையில ஒரு ஆளாகி நிக்கணும்னு நினைச்சிட்டு வந்தேன். ஹோட்டல்ல சர்வர் வேலைப் பார்த்திருக்கேன். பாட்டு எழுதி சந்தோஷப்படுத்தியிருக்கேன். என்னோட கடந்த காலத்தை வெச்சு ஒரு பயோபிக் படத்தை நானே எடுத்துருவேன். அந்தளவுக்கு நிறைய கஷ்டப்பட்டிருக்கேன். ஒரு கலைஞனா என்னைப் பிடிக்குறளவுக்கு உழைச்சிருக்கேன்னு நம்புறேன். நாகேஷ் சாருக்கு பிறகு காட்சிக்கு ஏத்த மாதிரி பொருத்தமான நடிப்பை கொடுக்குற வாய்ப்பு எனக்கு கிடைச்சிருக்கு. என்னோட புத்தியை எங்கேயும் அலைய விடாமா சரியா இருந்திருந்தா இது வரைக்கும் நூறு படத்துக்கு மேல நடிச்சிருப்பேன். ஒரு கலைஞனா தொடர முடியலனு ஃபீல் பண்றேன்.
இந்தப் படத்துக்காக புரொடியூசர் ராஜா போன் பண்ணி, 'அலப்பறைனு ஒரு கேரக்டர் வந்திருக்கு. தம்பி சொல்றேன்ணே, நம்பிக்கையா பண்ணுங்க'னு சொன்னார். 'சம்பளம் கம்மியா கொடுப்பீங்க... நான் வரலைனு' சொல்லிட்டேன். 'இல்லண்ணா, நியாயமான சம்பளம் கிடைக்கும்'னு சொன்னார். சரினு டைரக்டர் சுதாவைப் போய் பார்த்தேன். அவங்களுடைய 'இறுதிச்சுற்று' படத்தை நான் பார்க்கலை. ராஜா மேல இருந்த நம்பிக்கையில் போனேன். அலப்பறை கேரக்டர் பற்றி சொன்னாங்க. எனக்கு பிடிச்சிருந்தது. 'சரிமா... நான் பண்றேன்னு' சொல்லிட்டு வந்துட்டேன். இதுக்குப் பிறகு, டயலாக்ஸ் எப்படி பேசணும்னு ப்ரீ புரொடக்ஷன் வேலைகளில் இறங்கிட்டோம். இந்தப் படம் ஹிட்டானதுக்கு ப்ரீ புரொடக்ஷன் வேலைகள் முக்கியக் காரணம். என்னோட சினிமா கரியர்ல இது மாதிரி ஹோம்வொர்க் பண்ணிட்டு படத்தோட ஸ்பாட்டுக்கு போனதேயில்லை. சுதா மேடம் ரொம்ப கிரேட். ஆண் இயக்குநர்களுக்கு நிகரான பெண் இயக்குநரா சுதா மேடம் வருவாங்க.
சூர்யாகூட நடிச்சது நல்ல அனுபவமா இருந்தது. என்னோட முதல் ஹீரோ சூர்யாதான். இன்னும் அவரை மாமா, மச்சான்னுதான் நான் கூப்பிடுவேன். தன்னைத்தானே வளர்த்துக்கிட்ட ஒரு நடிகர். ரசிச்சு பார்ப்பேன். இவரோட ஆரம்ப கால சூர்யாவுக்கும் இப்போ இருக்குறவருக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கு. டைரக்டர் சொல்றதை கேட்டு மதிச்சு நடந்துக்குவார். 'நந்தா' படத்துல பார்த்த அதே சூர்யாவை இந்தப் படத்துலயும் பார்த்தேன். அதே அர்பணிப்போட இருந்தார். நடிக்கப் போறதுக்கு முன்னாடி நிறைய ஹோம்வொர்க் பண்ணிட்டு இருப்பார். யதார்த்தமான நடிகர். இந்த வேலைக்காகத்தானே கஷ்டப்படுறோம்னு சொல்லுவார். என் பையன்கிட்ட, 'சூர்யாவைப் பார்த்து கத்துக்கணும்'னு சொல்லுவேன். சூர்யாவுக்குப் பெரிய பேர் கிடைக்கும்னு எதிர்பார்த்தேன். படம் ரிலீஸூக்குப் பிறகு கிடைச்சிருச்சு.
ஹீரோயின் அபர்ணா முரளிகிட்ட, 'நல்லா நடிச்சா பெரிய பேர் வரும். இந்த கேரக்டரை டைட்டா பிடிச்சிக்கோ'னு சொன்னேன். அதே மாதிரி மத்த ஹீரோயின்ஸூக்கு ஏத்த மாதிரியான உடல்வாகு இவங்ககிட்ட இல்ல. ரேவதி, ஊர்வசி மாதிரி நடிச்சு பேர் வாங்குனு சொன்னேன். இப்போ வரைக்கும் போன் பண்ணா, 'சித்தாப்பா'னுதான் சொல்லி கூப்பிடுவாங்க. என்னை மாதிரியே மிடில் க்ளாஸ் குடும்பத்துல இருந்து வந்த பொண்ணு. மதுரை ஸ்லாங் ட்ரெய்னிங் எடுத்து நல்லா பேசி நடிச்சிட்டாங்க. இந்தப் படத்துல நடிச்சிருந்த எல்லோரும் ரசிச்சு பண்ணாங்க. எல்லாத்துக்கும் சுதா மேடம்தான் காரணம். தேசியளவுல பெரிய அங்கிகாரம் இந்தப் படத்துக்கு கிடைக்கும்னு நம்புறேன். தியேட்டர்ல படம் ரிலீஸாகியிருந்தா இன்னும் சந்தோஷமா இருந்திருக்கும்."
source https://cinema.vikatan.com/tamil-cinema/actor-karunas-talks-about-movie-soorarai-pottru-movie-experience
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக