Ad

புதன், 9 டிசம்பர், 2020

`கழிவுகளால் மோசமாகும் அமராவதி ஆறு; 5 இடங்களில் நீர் மாதிரி ஆய்வு!’- உயர் நீதிமன்றம் உத்தரவு


திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையில் உள்ள அமராவதி ஆறு, திருப்பூர், ஈரோடு, கரூர் ஆகிய மாவட்டங்கள் வழியாகப் பாய்ந்து இறுதியில் திருமக்கூடலூர் காவிரியில் கலக்கிறது. வாய்மடை தொடங்கி காவிரியில் கலக்கும் கடைமடைவரை அமராவதி ஆறு 282 கிலோ மீட்டர் தூரம்கொண்டது. இந்த ஆறு மாசடைந்து வருவதாக சூழலியல் ஆர்வலர்கள் தொடர்ந்து குரலெழுப்பி வருகின்றனர்.

உயர் நீதிமன்ற மதுரைக் கிளை

இந்த விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளை பதிவாளர் தாமாக முன்வந்து இதுதொடர்பாக நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில்,``அமராவதி ஆறு சுமார் 282 கி.மீ தூரம் திருப்பூர், கரூர் வழியாக செல்கிறது. கரூர் ,திருப்பூர் ஆகிய நகரங்கள் உள்ள நிறுவனங்கள், கழிவுகளை ஆற்றுக்குள் கலக்கின்றனர். மேலும் கரூர் சாயப்பட்டறைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் ஆற்றில் கலக்கப்படுகிறது.

இதனால் அமராவதி ஆறு மிகவும் மோசமான நிலைக்கு மாறுகிறது. தூய்மையான ஆறு மாசடவதை அரசு அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை. இதனால் அப்பகுதியில் உள்ள விவசாயிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே, சாயக்கழிவு நீரை அமராவதி ஆற்றில் கலக்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டிருந்ததது.

அமராவதி ஆறு

இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது, ஆறுகளை மாசுபடுத்துவோர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய அரசிடம் உரிய விளக்கம் பெற்று சமர்ப்பிக்கப்படும் என்று அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.

அப்போது நீதிபதிகள், அமராவதி ஆற்றுப் பகுதியில் உள்ள இரட்டை வாய்க்கால் பகுதியில் ஐந்து இடங்களில் நீரின் மாதிரிகள் எடுத்து மாசுக் கட்டுப்பாடு வாரியம் மற்றும் சென்னை கிங்ஸ் ஆய்வு கூடத்துக்கு அனுப்பி, அறிக்கை தாக்கல் செய்ய மாசுக் கட்டுப்பாடு வாரியத்துக்கு உத்தரவிட்டு வழக்கை வரும் 17-ம் தேதி ஒத்திவைத்தனர்



source https://www.vikatan.com/social-affairs/judiciary/madurai-hc-directs-tnpcb-to-submit-report-on-amaravati-river-water-quality

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக