Ad

புதன், 9 டிசம்பர், 2020

திருச்சி: `மது பாட்டில் வீச்சு; தடியடி!’ - களேபரமான வ.உ.சி பேரவையினரின் போராட்டம்

திருச்சியில் சாலை மறியலில் ஈடுபட்ட வ.உ.சி.பேரவையினர் மீது போலீஸார் தடியடி நடத்தி போராட்டத்தைக் கலைத்தனர்.

வ.உ.சி பேரவையினர்

பட்டியலினத்தில் உள்ள ஏழு உட்பிரிவுகளைச் சேர்ந்தவர்களை தேவேந்திரகுல வேளாளர் என்கிற பொதுப் பெயரில் அழைக்கத் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்யப்படும் என்று தெரிவித்தார். முதலமைச்சரின் இந்த பரிந்துரைக்கு வெள்ளாளர் சங்கத்தினர் மற்றும் வ.உ.சி பேரவையினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்திலும், ரயில் மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே வ.உ.சி பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் முடிவில் அப்பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். சாலை மறியலில் ஈடுபட்டவர்களைக் காவல்துறையினர் கைது செய்து வாகனத்தில் ஏற்றினர்.

தடியடி நடத்திய போலீஸார்

வாகனத்தில் ஏற மறுத்ததால் போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் போராட்டக்காரர்களை காவல்துறையினர் அடித்து வாகனத்தில் ஏற்றினர். வாகனத்திலிருந்த ஒரு நபர் மது பாட்டிலை காவல்துறையினர் நோக்கி வீசினார். அந்த மதுபாட்டில் காவலர் ஒருவர் மீது பட்டுச் சிதறியது.

போராட்டத்தில் ஈடுபட்டவர் கைது

இதையடுத்து அங்குப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தினர். தடியடியைத் தொடர்ந்து போராட்டக்காரர்கள் நாலாபக்கமும் சிதறி ஓடினர். தொடர்ந்து தப்பி ஓடியவர்களைக் காவல்துறையினர் விரட்டிப் பிடித்து கைது செய்தனர். இந்த தடியடி சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.



source https://www.vikatan.com/news/protest/voc-peravai-staged-protest-in-trichy

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக