Ad

செவ்வாய், 15 டிசம்பர், 2020

தமிழகத்தில் ₹19,955 கோடி புதிய முதலீடு... சேலம், திருப்பூர், ஓசூரில் அமையவிருக்கும் தொழிற்சாலைகள்!

ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது, ஒவ்வோர் ஆண்டும் உலக வர்த்தக முதலீட்டு மாநாடுகளை நடத்தி, அதன்மூலம் சர்வதேச முதலீட்டாளர்களிடமிருந்து முதலீடுகளைத் திரட்டலாம் என்கிற திட்டம் தீட்டப்பட்டது.

Also Read: 41 ஒப்பந்தங்கள்; ரூ.30,664 கோடி... முதலீடுகளை ஈர்த்ததில் முதலிடம்! எப்படிச் சாதித்தது தமிழகம்?

ஜெயலலிதா தலைமையில் நடந்த முதல் வர்த்தக முதலீட்டு மாநாடு, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற இரண்டாவது உலக வர்த்தக முதலீட்டு மாநாடு ஆகிய இரு மாநாடுகளின் வாயிலாகவும் பல்லாயிரம் கோடிக்கணக்கான புரிந்துணர்வு ஒப்பந்தகள் மேற்கொள்ளப்பட்டன. அவற்றில் ஒருசில ஒப்பந்தங்கள் நடைமுறைக்கு வந்து, வேலைவாய்ப்புகளை உருவாக்கி இருந்தாலும், பல ஒப்பந்தங்கள் இன்னும் ஒப்பந்தங்களாகவே இருப்பதாக துறை சார்ந்த நிபுணர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.

முதலமைச்சர் பழனிசாமி ஆட்சியின்கீழ், வர்த்தக முதலீட்டு மாநாடுகளில் மட்டுமல்லாமல், அவ்வப்போது சர்வதேச முதலீட்டாளர்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படுவது நல்ல விஷயமாகவே பார்க்கப்படுகிறது. கொரோனா காலத்தில்கூட, இந்தியாவிலேயே அதிகமான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்ட மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் முதலிடம் பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச முதலீடு

அந்த வகையில், கடந்த டிசம்பர் 14-ம் தேதியில், ரஷ்யாவின் பாதுகாப்புத் துறை நிறுவனமான கிரவுன் குரூப் ஆப் கம்பெனி, ஓலா எலெக்டிரிக் மற்றும் மஹிந்திரா சி.ஐ.இ ஆகிய முன்னணி நிறுவனங்கள் உட்பட 18 நிறுவனங்களுடன் சுமார் 19,955 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. இந்த ஒப்பந்தம் மூலம் தமிழ்நாட்டில் சுமார் 26,509 பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும் எனத் தமிழக அரசுத் தரப்பில் சொல்லப்படுகிறது.

இந்த 18 நிறுவனங்களில் ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் 2,354 கோடி ரூபாயும் (கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தொழிற்சாலையை அமைக்கிறது), டோரென்ட் கேஸ் 5000 கோடி ரூபாயும் (சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் சிட்டி கேஸ் டிஸ்ட்ரிபியூஷன் திட்டத்தைச் செயல்படுத்தவுள்ளது), ஃபர்ஸ்ட் சோலார் 4,875 கோடி ரூபாயும் (தமிழ்நாட்டில் சோலார் மாடியூல் தயாரிக்கும் தொழிற்சாலையை அமைக்கவுள்ளது), எஸ்.எஸ்.இ.எம் நிறுவனம் சுமார் 2,500 கோடி ரூபாயும் (திருப்பூர் மாவட்டத்தில் தத்தனூர் பகுதியில் எலக்ட்ரிக் வாகனத் தயாரிப்புத் தளம் மற்றும் ஃபியூச்சர் மொபிலிட்டி பார்க்கை அமைக்கிறது) மற்றும் கிரவுன் குரூப் 2,500 கோடி ரூபாயும் (தமிழ்நாட்டில் ஏரோஸ்பேஸ் கிளஸ்டர் பார்க் அமைக்க உள்ளது; விமானங்களுக்குச் சேவையான உபகரணங்கள், சப் சிஸ்டம்ஸ் மற்றும் டிரோன் ஆகியவற்றைச் சேலம் மாவட்டத்தில் தயாரிக்க உள்ளது) முதலீடு செய்யவுள்ளன.

பலே பவிஷ் அகர்வால். - ஓலா சி.இ.ஓ

மேலும், டாடா குழுமத்தின் வோல்டாஸ் குரூப் 1,001 கோடி ரூபாயும் மைலேன் நிறுவனம் 350 கோடி ரூபாயும் முதலீடு செய்ய உள்ளது. ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த எய்க்ஹோஃப் வைண்டு ஆசியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம், ரூ.410 கோடி ரூபாய் (காற்றாலைகளுக்கான கியர் பெட்டிகள் உற்பத்தி திட்டத்தினை மேற்கொள்கிறது) மற்றும் அஞ்சன் டிரக்ஸ் நிறுவனம் 60 கோடி ரூபாய் (திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டானில் மருந்து பொருள்கள் தயாரிக்க தேவைப்படும் ஏ.பி.ஐ மூலப்பொருட்கள் தயாரிக்கும் திட்டத்தினை மேற்கொள்கிறது) முதலீடு செய்யவுள்ளன.

இந்த ஒப்பந்தங்கள் அனைத்தும், ஒப்பந்த அளவில் மட்டுமே நின்றுவிடாமல், நடைமுறைக்கு வந்து வேலைவாய்ப்புகளை உருவாக்கவேண்டும் என்பதே நம் எதிர்பார்ப்பு!



source https://www.vikatan.com/business/investment/tamilnadu-signed-18-mous-worth-rs-19955-crores

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக