புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே கங்காணிப் பட்டியைச் சேர்ந்தவர் காடப்பன். ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலரான இவர், கடந்த 12.3 2019-ல் அதே பகுதியைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட 13 வயது சிறுமிக்குத் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்துவந்திருக்கிறார்.
இது பற்றி சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின்பேரில், திருமயம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காடப்பன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, கைதுசெய்யப்பட்டார். இந்த வழக்கு, புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக நடந்துவந்தது.
வழக்கை விசாரணை செய்த மகிளா நீதிமன்ற நீதிபதி சத்யா, மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்துக்காக காடப்பனுக்கு 14 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.25,000 ரூபாய் அபராதமும் விதித்து அதிரடி தீர்ப்பளித்தார்.
அதோடு, பாதிக்கப்பட்ட சிறுமி குடும்பத்துக்கு ரூ. 3,50,000 நஷ்டஈடு வழங்கவும் உத்தரவிட்டிருந்தார். இதில் ரூ. 2,50,000 ஏற்கெனவே கொடுக்கப்பட்டிருப்பதால் மீதமுள்ள ஒரு லட்ச ரூபாயை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் அந்தத் தீர்ப்பில் அவர் தெரிவித்திருந்தார்.
source https://www.vikatan.com/social-affairs/judiciary/retired-vao-sentenced-to-14-years-in-prison-in-sexual-harassment-case
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக