பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!
IPL போட்டிகள் குறித்த பல்வேறு விமர்சனங்கள் இருந்தாலும், உலக கிரிக்கெட் ரசிகர்களின் ஆல்டைம் ஃபேவரைட் லீக் IPL போட்டிகள்தான்.
2020-ம் ஆண்டிற்கான IPL போட்டிகளை மார்ச் மாதத்தில் இந்தியாவில் நடத்த BCCI திட்டமிட்டு இருந்தது. ஆனால், கொரோனா அசாதாரண சூழல் காரணமாகப் போட்டி தொடங்குவது தள்ளிக்கொண்டே போனது.
ஒருகட்டத்தில் இந்த ஆண்டிற்கான போட்டிகள் நடைபெறுமா என்னும் சந்தேகம் எழுந்தது. ஆனால், தற்போது செப்டம்பர் 19 முதல் நவம்பர் 10 வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE - துபாய், சார்ஜா மற்றும் அபுதாபி) இந்த ஆண்டிற்கான IPL போட்டிகள் நடைபெற இருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
IPL போட்டிகளுக்கான விரிவான நிலையான இயக்க நடைமுறைகள் (Comprehensive Standard Operating Procedures - SOPs) கிரிக்கெட் வாரியத்தால் இன்னும் வெளியிடப்படவில்லை. ஆனால், IPL போட்டிகளுக்கு என சில அணிகள் பரந்த வழிகாட்டுதல்கள் மற்றும் உள் நெறிமுறைகளைத் தயாரித்துள்ளன.
இவை இந்த சீஸன் எப்படி இருக்கும் என்பதைப் பற்றிய ஒரு விரிவான பார்வையை நமக்கு வழங்குகின்றன.
# 01. பார்வையாளர்கள் இல்லாத போட்டியாக இந்த சீஸனை நடத்த BCCI நிர்வாகம் திட்டமிட்டு வருகிறது. ஆயினும் எமிரேட்ஸ் கிரிக்கெட் வாரியம் 30 - 50% வரை பார்வையாளர்களை அனுமதிப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வருவதாகக் கூறியுள்ளது.
# 02. ஐ.பி.எல் வழக்கமாக 49 நாள்கள் வரை நடக்கும். ஆனால், இந்த சீஸன் 53 நாள்கள் நீடிக்கும். இதற்குக் காரணம் 8 மணி போட்டிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுவதே.(வளைகுடாவின் வானிலை காரணமாகப் போட்டிகள் 3.30 மற்றும் 7.30 மணிக்கு தொடங்கும்)
# 03. சாதாரணமாக ஐ.பி.எல் போட்டிகளில் உரிமையாளர்கள் தங்கள் அணியில் அதிகபட்சம் 25 வீரர்களை அனுமதிக்கலாம். குறைந்தபட்ச எண்ணிக்கை 18 ஆக இருக்கும். ஆனால், இந்த சீசனில் அதிகபட்சம் 24 வீரர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
# 04. டீம் மீட்டிங்குகள் ஹோட்டலின் பரந்த கலந்துரையாடல் அறைகளில் சமூக இடைவெளியுடன் நடத்தப்பட வேண்டும். இங்கு ஏ.சி கூடவே கூடாது. எல்லா கதவுகளையும் ஜன்னல்களையும், எப்போதும் திறந்தே வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
# 05. ஹோட்டலின் பொதுவான பகுதிகளில் கதவுகளை எப்போதும் திறந்து வைக்க அறிவுறுத்தப்படுகிறது. வீரர்கள் எந்த ஒரு கதவுகளின் கைப்பிடிகளைத் தொடுவதையும் கட்டாயம் தவிர்க்க வேண்டும்.
# 06. பயிற்சிக்கு முன்னும் பின்னும் வீரர்கள் தங்கள் அணி வீரர்கள் மற்றும் பிற ஊழியர்களுடன் எந்த வகையிலும் தொடர்புகொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
# 07. ஒவ்வொரு அணியும் மற்றவர்களுடன் தொடர்பு கொள்வதைத் தவிர்ப்பதற்காக வெவ்வேறு ஹோட்டலில் தங்கவைக்கப்பட உள்ளது.
# 08. ஹோட்டலில் முடிந்தவரை ஏ.சி பயன்பாட்டைத் தவிர்க்க வேண்டும். தவிர்க்க முடியாத சூழலில் ஏ.சி யை 24 - 30 டிகிரிக்குள் வைக்க வேண்டும். 40 - 70 சதவிகிதத்துக்கு இடையில் ஈரப்பத அளவைக் கொண்டு இயக்கப்பட வேண்டும்.
# 09. வீரர்களிடையே உபகரணங்கள் பரிமாற்றம் செய்யப்படுவதைத் தவிர்ப்பதற்காக அனைத்து உபகரணங்களிலும் வீரரின் பெயர்கள் எழுதப்படும். அவை தனித்தனியாக வைக்கப்படும்.
# 10. ஒவ்வொரு பிசியோதெரபி அல்லது மசாஜ் அமர்வுக்கு முன்னர் வீரர்கள் கட்டாயமாகக் குளித்துவிட்டு வருவது பரிந்துரைக்கப்படுகிறது.
# 11. பிசியோதெரபிஸ்ட், தனது சிகிச்சையின்போது வீரரின் கண்கள், மூக்கு அல்லது வாயைத் தொடவில்லை என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். அதே நேரத்தில் சிகிச்சையின் போது அறையில் ஒன்றுக்கு மேற்பட்ட வீரர்கள் இல்லாமல் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
பிசியோதெரபிஸ்ட்டைப் போலவே மற்ற பேக்ரூம் ஊழியர்களுக்கும் துல்லியமான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
# 12. வீரர்களின் உடல்நலம் குறித்து உன்னிப்பாக கவனித்து அறிக்கை அளிக்க வேண்டியது பயிற்சியாளரின் முக்கிய பொறுப்புகளில் ஒன்று. ஒவ்வொரு பயிற்சி அமர்வுக்கு முன்பும் வீரர்களில் எவரேனும் உடல்நிலை சரியில்லாமல் இருந்தால் பயிற்சியாளர் அணி நிர்வாகத்திடம் உடனே தெரிவிக்க வேண்டும்.
# 13. மைதானத்தில் இருக்கும் ஒரு வீரருக்கு நோயின் அறிகுறிகள் ஏதேனும் தென்பட்டால் அவர் உடனடியாகப் பயிற்சி மைதானத்திலிருந்து ஹோட்டலுக்கு திருப்பி அனுப்பப்படுவார். வீரர்களுக்கு என சிறப்பு கோவிட் -19 ஹெல்ப்லைனும் அமைக்கப்படும்.
# 14. பயிற்சி மைதானத்தில் உள்ள ஊழியர்கள் முழுதாகப் பரிசோதிக்கப்பட்டே அனுமதிக்கப்படுவர். மேலும், அவர்கள் முகமூடிகள் மற்றும் கையுறைகள் போன்ற போதுமான பாதுகாப்பு உபகரணங்களைக் கட்டாயம் அணிய வேண்டும்.
# 15. சமூக இடைவெளியை உறுதிசெய்ய ஒரு குறிப்பிட்ட நேரத்தில் வலைகளில் பயிற்சி செய்யும் வீரர்களின் எண்ணிக்கையைக் குறைக்கவும், பயிற்சி நேரங்களை நெகிழ்வுத் தன்மையுடன் அமைக்கவும் பயிற்சியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
# 16. பயிற்சியின்போது வீரர்கள் எல்லா நேரங்களிலும் எல்லா இடங்களிலும் 2 மீ சமூக இடைவெளி பராமரிக்க வேண்டும் என்று அணிகளின் நெறிமுறை கூறுகிறது.
# 17. முகமூடி அணிவது பயிற்சியின்போது தவிர எல்லா நேரங்களிலும் கட்டாயமாகும்.
# 18. வீரர்கள் மைதானத்தில் டிரஸ்சிங் ரூமில் உடை மாற்றுவதற்குப் பதிலாக, ஹோட்டல் அறைகளை விட்டு வெளியேறுவதற்கு முன்பு பயிற்சி ஆடை அணிந்துகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
# 19. ஒரு வீரர் பிற வீரர்களின் எந்தவொரு உபகரணத்தையும் தொடவோ, பகிந்துகொள்ளவோ கூடாது. பெரும்பாலான நேரங்களில் முகமூடி அணிந்திருக்க வேண்டும்.
# 20. மைதானத்தில் சக வீரர்களுடன் கைகுலுக்குதல், கட்டித் தழுவுதல், தூக்கி சுழற்றுதல், ஒன்றுகூடுதல் ஆகியவை கூடவே கூடாது.
# 21. வீரர்கள் துண்டு மற்றும் தண்ணீர் பாட்டில் போன்று அடிக்கடி தேவைப்படும் பொருள்களை ஒவ்வொருவரும் தங்களுக்கென தனியாக வைத்துக்கொள்ள வேண்டும். இவற்றை சக வீரர்களுடன் பகிர்ந்துகொள்ளக் கூடாது.
# 22. போட்டிகளின்போது வீரர்கள் மைதானத்தில் நடந்துகொள்ளும் முறைகள் குறித்து BCCI வெளியிட உள்ள SOPs களை வீரர்கள் முழுவதுமாகப் படித்துப் புரிந்துகொண்டு, அதன்படி மட்டுமே போட்டிகளில் பங்கேற்க வேண்டும்.
மைதானத்தினுள் ரசிகர்களை அனுமதிப்பது குறித்து ஈசிபி செயலாளர் முபாஷ்ஷீர் உஸ்மானி (Mubashshir Usmani) கூறுகையில், ``இந்த மதிப்புமிக்க நிகழ்வை எங்கள் மக்கள் அனுபவிக்க வேண்டும் என்று நாங்கள் நிச்சயமாக விரும்புகிறோம். ஆனால், இது முற்றிலும் அரசாங்கத்தின் முடிவு. இங்குள்ள பெரும்பாலான நிகழ்வுகளுக்கு அனுமதியின் அளவு 30 முதல் 50 சதவிகிதம் வரை இருக்கும். நாங்கள் இதே போன்ற எண்ணிக்கையைப் பராமரிக்க விரும்புகிறோம். இது குறித்து எங்கள் அரசாங்கத்தின் அங்கீகாரத்தைப் பெறுவோம் என்று நாங்கள் நம்புகிறோம்" என்று தெரிவித்துள்ளார்.
ரசிகர்களின் ஆரவாரக் கூச்சலுடன் டிவி யில் கிரிக்கெட் பார்ப்பதே ஓர் அலாதி சுகம். மைதானத்தில் உற்சாகமூட்டும் ரசிகர்களே கிரிக்கெட் வீரர்களுக்கு உந்துசக்தி. இந்த ஐபிஎல் சீஸன் கடுமையான கட்டுப்பாடுகளுடன், மைதானத்தில் ரசிகர்கள் இல்லாமல் அல்லது மிகக்குறைந்த எண்ணிக்கையிலான ரசிகர்களுடன் மட்டுமே நடைபெற உள்ளது.
இந்தச் சூழலில் வீரர்களின் செயல்திறனும், ரசிகர்களின் மனநிறைவும் எப்படி இருக்கப் போகின்றன என்ற கேள்வி இயல்பிலேயே எழுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம்!
- அகன் சரவணன்
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/
ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/
source https://www.vikatan.com/oddities/miscellaneous/reader-shares-about-ipl-2020
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக