Ad

வியாழன், 27 ஆகஸ்ட், 2020

விஜய் கல்யாண நாளில் விஜய் ரசிகர்கள் செய்த கல்யாணம்... யாருக்கு, எங்கே?!

நடிகர் விஜய்-சங்கீதா திருமண நாளை முன்னிட்டு ஒவ்வொரு வருடமும் விஜய் ரசிகர்கள் பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்வது வழக்கம். அந்த வகையில் இந்த வருடம் புதுக்கோட்டையைச் சேர்ந்த விஜய் ரசிகர்கள் புதுமையாக ஏழை ஜோடி ஒன்றுக்கு தங்களது சொந்த செலவில் திருமணத்தை நடத்தி வைத்திருக்கின்றனர்.

ஏழை ஜோடியை நெகிழவைத்த விஜய் ரசிகர்கள்

பொன்னமராவதி அருகே வெள்ளையன் கவுன்டன் பட்டியைச் சேர்ந்த சுந்தரம் மற்றும் அன்னவாசல் பகுதியைச் சேர்ந்த சுகன்யா ஆகிய இருவருக்கும் மிகவும் எளிமையாகத் திருமணம் நடைபெற இருந்தது. இரண்டு குடும்பமும் கஷ்டப்படும் குடும்பம் என்பதை அறிந்த விஜய் ரசிகர்கள் அந்தப் பெண்ணுக்குச் சீர்வரிசைகள் கொடுத்துச் சீரும், சிறப்புமாகத் திருமணம் நடத்தி வைக்க முடிவு செய்தனர்.

அதன்படி, புதுக்கோட்டை மாவட்ட விஜய் மக்கள் இயக்க மாவட்டத் தலைவர் பர்வேஸ் வீட்டில் அவரது தலைமையில், விஜய் ரசிகர்கள் ஒன்று கூடி திருமணத்தை நடத்தி வைத்தனர். அதோடு தாலிக்குத் தங்கம், பீரோ, கட்டில், மெத்தை, கிரைண்டர் எனச் சீர்வரிசைப் பொருட்கள் கொடுத்ததோடு திருமண விருந்து போட்டு அந்தத் தம்பதிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கின்றனர்.

ஏழை ஜோடியை நெகிழவைத்த விஜய் ரசிகர்கள்

விஜய் ரசிகர்களின் இந்த உதவியை எங்க காலம் உள்ள வரைக்கும் மறக்க மாட்டோம் என்று நெகிழ்ந்தனர் மணமக்கள். ''தாலிக்குத் தங்கத்துல தொடங்கி சாப்பாடு வரைக்கும் பார்த்துப் பார்த்து செஞ்சு திருமணத்தை நல்லபடியாக முடிச்சு வச்சிட்டோம். சுகன்யாவை எங்க தங்கச்சியா நெனச்சுதான் சீர்வரிசைகள் கொடுத்தோம்'' என்கிறார்கள் விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகள்.



source https://www.vikatan.com/news/tamilnadu/vijay-fans-organized-the-wedding-ceremony-of-a-couple

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக