Ad

வியாழன், 27 ஆகஸ்ட், 2020

18 நாடுகள், 70 நாள்கள், 15 லட்சம் ரூபாய்... டெல்லி to லண்டன் பஸ்!

ஹரியானா மாநிலத்தின் குருகுராம் பகுதியைச் சேர்ந்த நிறுவனம் 'அட்வென்சர் ஓவர்லாண்ட்'. தரை வழி சாகச பயணங்களுக்காகத் தொடங்கப்பட்ட இந்நிறுவனம் உலகளவில் பல சாகசங்களைச் செய்து வருகிறது. 2010-க்குப் பிறகு தொடங்கப்பட்ட நிறுவனம் அண்டார்டிக்காவைத் தவிர அனைத்து கண்டங்களிலும் பயணித்து, 75 நாடுகளில் சாகசங்களை நிகழ்த்தி, 16 உலக சாதனைகளைப் படைத்துள்ளது. தற்போது டெல்லியிலிருந்து லண்டன் வரை பஸ் பயணம் என மற்றொரு ஆச்சர்யத்தைத் தொடங்கியிருக்கிறது அட்வெஞ்சர் ஓவர்லாண்ட்.

'லண்டனுக்கு பஸ்' (Bus to London) என்று பெயரிடப்பட்ட இப்பயணம் டெல்லியில் தொடங்கி லண்டனில் முடியும் முதல் பேருந்து பயணமாகும். 18 நாடுகளுடன் 20,000 கிலோமீட்டர் தூரம் கொண்ட பயணம் 70 நாள்கள் நடைபெறுகிறது. இதனில் இணைபவர்கள் மியான்மர், தாய்லாந்து, லாவோஸ், சீனா, கிர்கிஜிஸ்தான், உஸ்பெகிஸ்தான், கஜகஸ்தான், ரஷ்யா, லாட்வியா, லித்வேனியா, போலந்து, செக் குடியரசு, ஜெர்மனி, நெதர்லாந்து, பெல்ஜியம் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளைக் கடந்து லண்டன் செல்வார்கள்.

Also Read: வால்ஷ், மெக்ராத், அக்ரம்... ஜாம்பவான்களால் முடியாததை ஆண்டர்சன் எப்படி சாதித்தார்? #JamesAnderson600

இதற்கென்றே 20 நபர்கள் மட்டும் பயணிக்கும் விதமாக 20 உயர்தர இருக்கைகளுடன் கூடிய பஸ் வடிவமைக்கப்பட்டுள்ளது. பயணிகளுடன் ஒரு ஓட்டுநர், ஒரு உதவி ஓட்டுநர், ஒரு வழிகாட்டி மற்றும் உதவியாளர் பயணமாவார்கள். ஒவ்வொரு பகுதிகளின் இடைவெளியின் போது சுற்றுலா வழிகாட்டி மாறிக்கொண்டே இருப்பார்கள். பயணிகளுக்கான விசாவை நிறுவனமே பெற்று தந்துவிடும். மொத்தம் நான்கு கட்டங்களாக இந்த சுற்றுலா பிரிக்கப்பட்டுள்ளது. பயணிகளுக்கு போதுமான அல்லது வசதியான ஓர் பகுதியில் தங்களை இணைத்துக்கொள்ளலாம். டெல்லியில் தொடங்கி லண்டன் செல்லும் முழுமையான பயணத்திற்கான டிக்கெட் கட்டணம் 15 லட்சம் ரூபாய். 70 நாள்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் நிறுவனமே வழங்கும். நான்கு அல்லது ஐந்து நட்சத்திர உணவகங்களில் தங்கவைக்கப்படும் பயணிகளுக்கு அனைத்து நாடுகளிலும் இந்திய உணவு கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Calcutta to London (From History)

இத்தகைய தனித்துவமான பயணம் குறித்த ஐடியாவை, அட்வெஞ்சர் ஓவர்லாண்ட் இணை நிறுவனர் 'டுஷர் அகர்வால்' தன் பயணங்களின் தொடர்ச்சியாகப் பெற்றார். 2017,18,19ம் ஆண்டுகளில் டுஷர் அகர்வால் மற்றும் சஞ்சய் மதன் இருவரும் தரைவழியாக லண்டன் பயணித்தனர். தரை பயணத்தில் பலருக்கும் இருந்த ஆர்வத்தின் வெளிப்பாடாகவே இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது என்கிறார் டுஷர். கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதியே இதற்கான அறிவிப்பு வெளியிட்டாலும், 2021-ம் ஆண்டு மே மாதம்தான் பயணம் தொடங்குகிறது. அனைத்து நாடுகளிலும் கொரோனா பாதிப்பு இயல்புநிலைக்குத் திரும்பிய பிறகு முன்பதிவு நடைபெறும்.



source https://www.vikatan.com/lifestyle/travel/delhi-to-london-bus-to-be-initiated-from-2021

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக