Ad

வியாழன், 20 ஆகஸ்ட், 2020

கோவை:`பல்லுயிர்களுக்கு உணவு.. இயற்கை நண்பன்!’ - அசத்தும் மண் தானிய விநாயகர் சிலைகள்

விநாயகர் சதுர்த்தி வருகின்ற சனிக்கிழமை கொண்டாடப்படுகிறது. அப்போது, மக்கள் விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடத்துவது வழக்கம். இதற்காக விதவிதமாக விநாயகர் சிலைகள் தயாரிக்கப்படும். வழிபாட்டுக்கு பிறகு, அந்த சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கப்படும். (இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக, தமிழகத்தில் பொது இடங்களில் சிலை வைத்து வழிபட தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது)

மண் விநாயகர்

Also Read: `ஊருக்குப் போகக்கூட பணம் இல்ல!’ - விநாயகர் சதுர்த்தி ஊர்வல தடை; கலங்கும் சிலை தயாரிப்பு கலைஞர்கள்

இதனிடையே, விநாயகர் சிலைகள் பிளாஸ்டா பாரிஸில் தயாரிக்கப்படுவதால், அவற்றை தண்ணீரில் கரைக்கும்போது, நீர்நிலைகளின் சூழல் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக சூழலியல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். இதைத்தடுக்கும் விதமாக கோவையில், தன்னார்வலர்கள் ஒன்றிணைந்துள்ளனர்.

அதன்படி, கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த தன்னார்வலர்கள் மண்ணில் தயாரிக்கும் விநாயகர் சிலைகளை ஊக்கப்படுத்தி, அவற்றில் சிறுதானிய வகைகளை நிரப்பி விற்று வருகின்றனர். இதுகுறித்து, அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன், “பெயின்ட் மற்றும் பிளாஸ்டா பாரிஸ் போன்ற செயற்கை முறையில் தயாரிக்கப்படும் சிலைகளால் நீர்நிலைகள் மாசடைவதை பார்த்து வருகிறோம்.

மணிகண்டன்

அங்கிருக்கும் பல்லுயிர்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. விநாயகர் சிலைகளுக்கு வித்தியாசம் தெரியாது என்பதால், இதில் பெயின்ட் எதுவும் அடிக்காமல் அப்படியே தயாரித்து விற்று வருகிறோம்.

நம் முன்னோர்கள் பயன்படுத்திய மண் சிலைகளை பயன்படுத்துவதன் மூலம், மண்பாண்ட வியாபாரிகளுக்கு லாபம் கிடைக்கிறது. அவர்களிடம் இருந்து வாங்கிய சிலைகளில் கம்பு, சோளம், ராகி, பயிறு வகைகளை நிரப்பி வருகிறோம். இவற்றை நீர்நிலைகளில் கரைப்பதன் மூலம் எந்த பாதிப்பும் ஏற்படாது. மேலும், நீர்நிலைகளில் உள்ள மீன் போன்ற உயிரினங்களுக்கு இது உணவாக அமையும்.

தானியம்

அதேபோல, இந்த தானியங்கள் வளர்ந்தால் பறவைகளுக்கும் உணவாகக் கிடைக்கும். இதை வீட்டில் உள்ள பக்கெட்டில் கரைத்தால் கூட, அவற்றில் செடி வைத்து பயன்படுத்தலாம்” என்றார்.



source https://www.vikatan.com/news/tamilnadu/eco-friendly-vinayagar-idols-in-coimbatore

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக