ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெடின் (ஆர்ஐஎல்) துணை நிறுவனமான ரிலையன்ஸ் ரீடெய்ல் வென்ச்சர்ஸ் லிமிடெட் (ஆர்ஆர்விஎல்) சென்னையைச் சேர்ந்த நெட்மெட்ஸ் (வைட்டலிக் ஹெல்த் பிரைவேட் லிமிடெட்) மற்றும் அதன் துணை நிறுவனங்களின் 60% பங்குகளை சுமார் 620 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளது. நெட்மெட்சின் 60% பங்குகளையும் அதன் துணை நிறுவனங்களான ட்ரெசாரா ஹெல்த் பிரைவேட் லிமிடெட், நெட்மெட்ஸ் மார்க்கெட் பிளேஸ் லிமிடெட் மற்றும் தாதா பார்மா டிஸ்டிரிபியூஷன் பிரைவேட் லிமிடெடின் 100% பங்குகளையும் வாங்கியுள்ளது.
ரிலையன்ஸ் ரீடெய்ல் வென்ச்சர்சின் இயக்குநர் ஈஷா அம்பானி, ``மருந்து சேவைகளை கணினிமயமாக்கி நாட்டு மக்களுக்கு மலிவான விலையில் தரமான மருந்துகளை விநியோகம் செய்யவே இந்த முதலீடு செய்யப்பட்டுள்ளது" என்று கூறியுள்ளார்,
அமேசான் இந்தியா, இ-பார்மசி சேவையை பெங்களூரில் அறிமுகப்படுத்திதையடுத்து, ரிலையன்ஸூம் தற்போது இ-பார்மசி துறையில் முதலீட்டில் இறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
அமேசான் மற்றும் வால்மார்ட்டின் ஃபிளிப்கார்ட்டையடுத்து ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஜியோமார்ட் என்ற ஆன்லைன் மளிகை சேவையை மே மாதத்தில் அறிமுகப்படுத்தியது.
கோவிட் -19 ஊரடங்கால் வீட்டிற்குள் முடங்கியிருக்கும் மக்கள், ஆன்லைன் மூலம் மருந்துகளை ஆர்டர் செய்ய தொடங்கியுள்ளதால் இ-பார்மா நிறுவனங்களின் தேவையும் அதன் வர்த்தகமும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.
2015-ல் வைடாலிக் நிறுவனத்துடன் இணைந்த நெட்மெட்ஸ் நிறுவனம், மருத்துவர் முன்பதிவு, நோய் கண்டறிதல் மற்றும் மருந்து விநியோக சேவைகளை ஆன்லைன் மூலம் வழங்கி வருகிறது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கடந்த சில மாதங்களாக தனது ஜியோ பிளாட்ஃபார்ம்களுக்காக சுமார் 20 பில்லியன் டாலர் முதலீட்டை திரட்டியுள்ளது. அமெரிக்க டெக் நிறுவனங்களான ஃபேஸ்புக் மற்றும் கூகுள் போன்றவையும் ரிலையன்ஸ் ஜியோவில் முதலீடு செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
source https://www.vikatan.com/business/finance/reliance-retail-bought-majority-stake-in-e-pharmacy-company-netmeds
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக