தேனி மாவட்டத்தில், கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. நேற்றைய நிலவரப்படி, மாவட்டம் முழுவதும், கொரோனா தொற்றால் 6,539 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 3,792 பேர் குணமடைந்து வீடு திரும்பினாலும், 2,668 பேர் இன்னும் சிகிச்சையில் உள்ளனர்.
Also Read: தேனி: `நேரடி கொரோனா மரணங்கள் மிகக் குறைவு!’ - சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன்
சிகிச்சையில் உள்ள நபர்களின் எண்ணிக்கை, அண்டை மாவட்டமான மதுரையை விட மிக அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து, நேற்றைய நிலவரப்படி 79 ஆக உள்ளது.
எல்லாவற்றிற்கும் மேலாக, மாவட்டத்தில், கொரோனா தாக்கம் அதிகம் உள்ள பகுதியாக பெரியகுளம் மாறியுள்ளது. நேற்றைய நிலவரப்படி, பெரியகுளத்தில் 64 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தினமும் சாராசரியாக 50 நபர்களுக்கு குறையாமல் கொரோனாவால் பாதிக்கப்பட்டுவருகின்றனர். கடந்த ஐந்து நாள்களில் பெரியகுளத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மட்டும், 355 ஆக உள்ளது. கிட்டத்தட்ட கொரோனா மையமாக பெரியகுளம் மாறிவருகிறது.
துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த ஊரான பெரியகுளத்தில், அவரது தம்பியும், தேனி ஆவின் தலைவருமான ஓ.ராஜா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, மருத்துவ சிகிச்சைக்குப் பின்னர், தற்போது வீடு திரும்பியிருக்கிறார். இப்படி, பெரியகுளத்தில் உள்ள அரசு அதிகாரிகள், சுகாதாரப் பணியாளர்கள் என அடுத்தடுத்து கொரோனாவால் பாதிக்கப்படுவதும், நாளுக்கு நாள் கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதும், பெரியகுளம் பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
Also Read: தேனி: `தனி நபர் பயன்படுத்திய உழவர் உற்பத்தியாளர் குழு டிராக்டர்!’ - கொதித்த விவசாயிகள்
சென்னைக்கு அடுத்தபடியாக மதுரை, விருதுநகரில் கொரோனா தாக்கம் அதிகரித்து, தற்போது அங்கு பாசிட்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை சற்று குறைந்துவரும் சூழலில், தேனி மாவட்டத்தில் மட்டும், பாசிட்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை கடந்த ஜூலை 24ம் தேதியில் இருந்து இருநூறுக்கும் குறையாமல் தொடர்ந்து உயர்ந்துகொண்டே செல்கிறது. அதிகபட்சமாக, கடந்த ஆகஸ்ட் 2ம் தேதி தேனியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 311 ஆக இருந்தது.
இது தொடர்பாக கலெக்டர் அலுவலக அதிகாரியிடம் பேசிய போது, ``கொரோனா தடுப்புப் பணிகள் முழு வீச்சில் நடந்துவருகிறது. சித்தா சிகிச்சை மையம் மேலும் இரண்டு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், தேனியில் செயல்படுத்தப்படும் கொரோனா தடுப்புப் பணிகளை பார்வையிட்டு, இறுதியாக, `விரைவில் தேனியில் கொரோனா தாக்கம் குறையும்’ என்று கூறினார். விரைவில் நிலைமை சீராகும்” என்றார்.
source https://www.vikatan.com/news/tamilnadu/periyakulam-turns-into-corona-hot-spot-of-theni
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக