கோவிட் 19 காரணமாக பெரும்பாலான மக்கள் வீட்டில் இருந்து (Work From Home) பணியாற்றுகிறார்கள். பள்ளிக் குழந்தைகளும் கல்லூரி மாணவர்களும் வீட்டில் இருந்துகொண்டே ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்று வருகிறார்கள்.
இப்படியாக, குடும்பத்தில் அனைவரும் வீட்டில் இருக்கும் நிலையில், மின்சாரம் மற்றும் மின்னணுப் பொருள்களின் பயன்பாடு அதிகமாக இருக்கும். உணவு சமைத்தல் உள்ளிட்ட பணிகளும் கூடுதலாக இருக்கும். இத்தகைய சூழலில், குடும்பத்தினரின் பாதுகாப்பு என்பது மிகவும் முக்கியமானது.
வீட்டில் எவ்வாறு பாதுகாப்பாக இருப்பது, ஆபத்துகளை எவ்வாறு எதிர்கொள்வது மற்றும் தவிர்ப்பது தொடர்பான பல்வேறு ஆலோசனைகளை வழங்கக்கூடிய ஆன்லைன் வகுப்பு ஜூனியர் விகடன் சார்பில் நடைபெறவிருக்கிறது.
நீண்டகால அனுபவம் கொண்ட பாதுகாப்பு நிபுணரான கே.ஜெகதீஷ் அடபா, இந்நிகழ்ச்சியில்பங்கேற்று சிறப்பு ஆற்றவிருக்கிறார். நேயர்களின் கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் அவர் பதிலளிக்கக் காத்திருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் அனைவரும் கட்டணமின்றி பங்கேற்கலாம்.
‘ஜூனியர் விகடன்’ சார்பில் ஆகஸ்ட் 29-ம் தேதி மாலை 3.30 மணி முதல் 5.00 மணி வரை நடைபெறவுள்ளது.
வீட்டில் பாதுகாப்பு...
ஆபத்தை எதிர்கொள்வது எப்படி? பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்க... https://bit.ly/2EgIENj
source https://www.vikatan.com/events/announcements/online-programme-on-safety-at-home
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக