Ad

புதன், 9 நவம்பர், 2022

``உலகக் கோப்பை கிக் பாக்ஸிங்கில் தங்கம் வெல்ல வேண்டும்" - தேசியப் போட்டியில் வென்ற எஸ்.ஐ

தூத்துக்குடி பாறைக்குட்டம் பகுதியைச் சேர்ந்தவர் காவல் சார்பு-ஆய்வாளர் இ.இசக்கிராஜா 33. பி.இ., எம்.டெக்., எம்.சி.ஏ., எம்.ஏ.,பி.எல்., படித்துள்ள இவர் தமிழ்நாடு காவல்துறையில் 2016-ல் சார்பு-ஆய்வாளராகப் பணியில் சேர்ந்தார்.

திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பணியாற்றிவிட்டு தற்போது திண்டுக்கல் மாவட்ட தீவிர குற்றப்பிரிவில் பணியாற்றி வருகிறார். 

பதக்கம்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பணியாற்றியபோது ரெளடிகளின் வாட்ஸ்-அப் குழுவில் பகிரங்கமாக சவால் விடுத்து எச்சரித்தார். அந்த வாட்ஸ்-அப் ஆடியோ சமூகவலைதளங்களில் வைரல் ஆகியதில் அவர் பிரபலம் ஆனார். தற்போது பழநி தாலுகா காவல் நிலையத்தில் இருந்து திண்டுக்கல் மாவட்ட தீவிர குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.  

இந்நிலையில் கடந்த நவம்பர் 2ம் தேதி முதல் 6ம் தேதி வரை டெல்லியில் நடைபெற்ற சர்வதேச சீனியர் கிக் பாக்ஸிங் சாம்பியன்ஸிப் போட்டியில் இந்திய அணி சார்பில் 84-89 கிலோ எடைப்பிரிவில் லைட் கான்டாக்ட், லோ கிக் ஆகிய இரண்டு போட்டிகளில் கலந்துகொண்டு வெள்ளி மற்றும் வெண்கலப்பதக்கங்களை வென்றுள்ளார். 

இசக்கிராஜா

இதுகுறித்து இசக்கிராஜாவிடம் பேசினோம் ``ரஷ்யாவில் நடைபெற்ற போட்டியில் வெண்கலம், ஆசிய அளவிலான போட்டியில் தங்கம், மற்றும் வெள்ளி பதக்கங்களை வென்றுள்ளேன். அண்மையில் ஹதராபாத்தில் நடந்த போட்டியில் ஹெவி வெயிட் சாம்பியன் பெற்று டி.ஜி.பி சைலேந்திரபாபு சாரிடம் வாழ்த்து பெற்றது பெரும் மகிழ்ச்சி. 

இசக்கிராஜா

சிறுவயது முதலே விளையாட்டில் ஆர்வம் இருந்தது. குறிப்பாக ஈட்டி எறிதலில் மிகவும் ஆர்வமாக இருந்தேன். அப்போது நாகர்கோவிலில் நடைபெற்ற ஒரு ஸ்போர்ட்ஸ் மீட்டில் கிங் பாக்ஸிங் போட்டி நடப்பதை பார்த்தேன். அதையடுத்து கிங் பாக்ஸிங் மீது ஆர்வம் ஏற்பட்டு, மாஸ்டர் செல்வராஜிடம் 2004 முதல் கிங் பாக்ஸிங் கற்கத் தொடங்கினேன். எனது 18 வயதில் இருந்து கிங் பாக்ஸிங் போட்டிகளில் பங்கேற்று வருகிறேன். தேசிய அளவிலான போட்டிகளில் 15 தங்கம், 5 வெள்ளி பதகக்கங்கள் வென்றுள்ளேன். அடுத்த முறை உலகக் கோப்பை கிக் பாக்ஸிங்கில் தங்கப்பதக்கம் வெல்ல வேண்டும் என்பதே எனது இலக்கு" என்றார். 



source https://sports.vikatan.com/news/story-about-essakiraja-who-won-silver-medallion-national-kick-boxing-championship

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக