Ad

செவ்வாய், 8 நவம்பர், 2022

கொரோனா குறித்து மக்களிடம் நீங்கிய அச்சம்... காலாவதியாகும் 50 மில்லியன் கோவாக்ஸின் தடுப்பூசிகள்!

கோவிட் தொற்று மக்களை அச்சுறுத்தி வந்தபோது தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டது. பலரும் தங்களை நோய்த்தொற்றில் இருந்து காத்துக்கொள்ளத் தடுப்பூசிகளைச் செலுத்திக் கொண்டனர். 

A woman receives the vaccine

அதன் அடிப்படையில், அனைவருக்கும் தடுப்பூசிகள் கிடைக்கும் வகையில், பாரத் பயோடெக் கோவாக்ஸின் தடுப்பூசிகளைத் தொடர்ந்து உற்பத்தி செய்து வந்தது. அதோடு வெளிநாடு களுக்கும் தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்தது. 

இந்நிலையில், நோய்த்தொற்றின் தீவிரம் குறைந்து, இதன் பிறகு அச்சுறுத்தும் நோயாக கோவிட் இருக்காது என்ற நிலை வந்ததும், மக்கள் தடுப்பூசிகளைச் செலுத்திக்கொள்வதும் கணிசமாகக் குறைந்தது. 

பாரத் பயோடெக் நிறுவனம், 2021-ம் ஆண்டு இறுதிக்குள் ஒரு பில்லியன் டோஸ்கள் வரை தயாரிக்க வேண்டும் என்ற இலக்கோடு செயல்பட்டு வந்தாலும், தடுப்பூசியின் தேவை மக்களிடையே குறைந்ததால், இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே அது தனது உற்பத்தியை நிறுத்தியது. 

தற்போது பாரத் பயோடெக்கிடம் 200 மில்லியனுக்கும் அதிகமான கோவாக்ஸின் மருந்து மொத்தமாகவும், 50 மில்லியன் டோஸ் தடுப்பூசிகள், குப்பிகளில் நிரப்பி பயன்பாட்டுக்குத் தயாராகவும் உள்ளன. 

Vials of COVAXIN

இந்நிலையில், தடுப்பூசி தயாரிப்பின் தேவை இல்லாததால், 50  மில்லியன் கோவாக்ஸின் தடுப்பூசிகள், 2023-ம் ஆண்டின் தொடக்கத்திலேயே காலாவதியாகிவிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், கடுமையான இழப்பை பாரத் பயோடெக் நிறுவனம் சந்திக்க நேரிடும். ஒருவேளை இவையனைத்தும் காலாவதியாகும் பட்சத்தில், இழப்பின் மதிப்பு எவ்வளவாக இருக்கும் என்பது இன்னும் தெரியவில்லை. 



source https://www.vikatan.com/news/healthy/50-million-of-bharath-biotech-s-covaxin-set-to-expire

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக