Ad

வெள்ளி, 7 ஜனவரி, 2022

How to series: குரல் மாறுபாடுகளைக் குணப்படுத்துவது எப்படி? | How to cure voice disorders?

ஒவ்வொருவரது குரலும் வேறுபட்டது மற்றும் தனித்துவமானது. இருந்தும் சிலருக்கு இயல்புக்கு மாறாக குரல் இருக்கும். ஆணுக்குப் பெண் குரல், கீச்சுக்குரல், கரகரப்பு போன்ற குரல் மாறுபாடுகளை எவ்வகையில் குணப்படுத்தலாம் என சென்னையைச் சேர்ந்த காது, மூக்கு, தொண்டை நிபுணர் ப்ரீத்தியிடம் கேட்டோம்.

காது மூக்கு தொண்டை நிபுணர் ப்ரீத்தி

``குரல் மாறுபடுவதற்கு சளிப்பிரச்னை தொடங்கி புற்றுநோய் வரை பல காரணங்கள் இருக்கின்றன. எனவே இதற்கு பொதுவான தீர்வைக் கூறிவிட முடியாது. நன்றாக இருந்த குரல் திடீரென மாறுபாடு அடைகிறது என்றால் எண்டோஸ்கோபி (Endoscopy) எடுத்துப் பார்க்கலாம். குரல்வளையில் தேவையற்ற தசை வளர்ச்சி அல்லது தழும்பு ஏற்பட்டிருந்தால்கூட குரல் மாறலாம். எண்டோஸ்கோபியில் அது கண்டறியப்பட்டால் அறுவை சிகிச்சை மூலம் அத்தசையை நீக்கி விட்டால் குரல் இயல்பு நிலைக்குத் திரும்பி விடும்.

Also Read: How to series: முக சுருக்கங்களை வீட்டிலேயே நீக்குவது எப்படி? | How to get rid of wrinkles at home?

குரல் மாறுபாட்டுக்கான சிகிச்சையில் ஸ்பீச் தெரபி அடிப்படையானது மற்றும் முதன்மையானது. பெண் குரல் கொண்ட ஆண்கள், கீச்சுக்குரல் கொண்டவர்கள் மற்றும் கரகரப்பான குரல் கொண்டவர்களை பரிசோதித்துவிட்டு முதலில் ஸ்பீச் தெரபிக்குத்தான் பரிந்துரைப்போம்.

உடல் தசைகளுக்கு எப்படி பிசியோதெரபியோ, அதுபோல் குரல்வளை தசைகள் இயக்கத்தை முறைப்படுத்துவது ஸ்பீச் தெரபி. குரல்வளை நன்கு இயங்குவதற்கான பயிற்சிகள் அளிக்கப்படும். கீச்சுக்குரல் மற்றும் பெண் குரல் கொண்டவர்களுக்கு கழுத்தின் சில பகுதிகளில் அழுத்தி குரல் மாறுபாட்டுப் பயிற்சி வழங்கப்படும். குரல்வளையின் இரண்டு பக்கங்களில், ஒரு பக்கம் இயங்காமல் இருப்பதால்கூட குரல் மாறுதல் ஏற்படும். ஸ்பீச் தெரபி மூலம் இவற்றையெல்லாம் முறைப்படுத்த முடியும். மூன்று மாதங்கள் அவசியம் ஸ்பீச் தெரபி எடுத்துக்கொள்ள வேண்டும். மூன்று மாதங்களுக்குப் பிறகும் குரலில் எந்த முன்னேற்றமும் தெரியவில்லையெனில் அடுத்தகட்டமாக அறுவை சிகிச்சைக்கான ஆலோசனை மேற்கொள்ளப்படும்.

Treatment (Representational Image)

Also Read: How to series: ஆளி விதைகளை எப்படி சாப்பிடுவது? | How to eat Flax seeds to lose body weight?

எல்லோருக்கும் சிகிச்சை தேவைப்படாது. அதேபோல, சிலருக்கு அவர்களது இயல்பான குரலில் எந்த மாற்றமும் செய்ய முடியாது. அதிகம் பேசுகிறவர்களுக்கு குரல்வளையின் தசைகள் அதிகம் உராய்வதால் கரகரப்பான குரல் ஏற்படுவதும் இயல்பானதுதான். கீச்சுக்குரல் மற்றும் பெண் குரல் ஆகியவற்றை எண்டோஸ்கோபி மூலம் கண்டறிந்து அறுவை சிகிச்சை மூலம் குணப்படுத்த முடியும் “ என்கிறார் ப்ரீத்தி.

- ஜிப்ஸி



source https://www.vikatan.com/health/healthy/how-to-cure-voice-disorders

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக