`பெரியார் பிறந்தநாளான செப்டம்பர் 17-ம் தேதி சமூகநீதி நாளாக கொண்டாடப்படும்!’
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தற்போது சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்று வருகிறது. முதல்வர் ஸ்டாலின் தினமும் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வரும் நிலையில், இன்று பெரியார் பிறந்தநாளான செப்டம்பர் 17-ம் தேதி சமூகநீதி நாளாக கொண்டாடப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். ஸ்டாலின், ``இந்தியா முழுவதும், சமூக நீதிக்கு அடித்தளம் இட்டவர் பெரியார். பெரியார் பேசிய பேச்சுக்கள், எழுதிய எழுத்துக்கள், பிறர் பேச, எழுத தயங்கியது ஆகும். அவர் நடத்திய போராட்டங்கள் குறித்து பேச வேண்டும் என்றால் அவையை 10 நாள்கள் ஒத்தி வைத்துவிட்டு தான் பேச வேண்டும்” என்றார் முதல்வர் மு.க ஸ்டாலின்.
பெரியார் பிறந்தநாள் சமூகநீதி நாளாக கொண்டாடப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்புக்கு பாஜக வரவேற்பு தெரிவித்துள்ளது. பா.ஜ.க எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் பேசுகையில், `` பா.ஜ.க தமிழக அரசின் இந்த முடிவை வரவேற்கிறது” என்றார்.
source https://www.vikatan.com/news/general-news/tamil-news-today-06-09-2021-just-in-live-updates
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக