கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக, கடந்தாண்டு முதலே பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தன. இந்நிலையில், கடந்த 1-ம் தேதி முதல் 9,10,11,12 ஆகிய நான்கு வகுப்புகளை சேர்ந்த மாணவர்கள் பள்ளிக்கு வருவதற்கு அனுமதிக்கப்படுகின்றனர். கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றி மாணவர்களுக்கு வகுப்பு எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மூன்றாம் அலை எச்சரிக்கை உள்ள நிலையில், பள்ளிகள் திறக்கப்பட்டதற்கு ஆங்காங்கே எதிர்ப்புகளும் இருந்து வருகின்றன.
Also Read: திறந்து கிடக்கும் தமிழக - கேரள எல்லைகள்; பயணிகளால் கொரோனா பரவும் அபாயம்?!
பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்களுக்கு ரேண்டம் முறையில் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை அரசு உயர் நிலைப்பள்ளியில் ரேண்டம் முறையில் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் 3 பேருக்கு தொற்று இருப்பது உறுதியானது.
மொத்தம் 33 மாணவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், 3 பேருக்கு மட்டும் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் சுல்தான்பேட்டை அரசு உயர் நிலைப்பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, 3 நாள்களுக்கு பள்ளியை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த 3 மாணவர்களும் சிகிச்சைக்காக கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அந்த மாணவர்களுக்கு எந்த அறிகுறியும் இல்லை.
இதில் இருவரின் பெற்றோர் 2 தவணை தடுப்பூசியும் செலுத்தியுள்ளனர். 3 மாணவர்களுடன் தொடர்பில் இருந்த மாணவர்களுக்கு சுகாதாரத்துறையினர் இன்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ள உள்ளனர்
source https://www.vikatan.com/news/tamilnadu/9-students-tested-positive-for-corona-in-coimbatore
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக