கொரோனா காலத்தில் வீடுகளில் ஏசி பயன்படுத்தலாமா?
- அவந்திகா (விகடன் இணையத்திலிருந்து)
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பேராசிரியர் டாக்டர் முத்துச்செல்லக்குமார்.
``இந்தியன் சொசைட்டி ஆஃப் ஹீட்டிங் ரெஃப்ரிஜிரேட்டிங் அண்டு ஏர் கண்டிஷனிங் இன்ஜினீயர்ஸ் (ISHRAE) அமைப்பு மற்றும் மத்திய பொதுப்பணித்துறை (CPWD) இந்த விஷயத்தில் குறிப்பிட்டிருக்கும் சிலவற்றை இங்கே உங்களுடன் பகிர்கிறேன்.
வீடுகளில் ஏசி பயன்படுத்தலாம். ஆனால் அப்படிப் பயன்படுத்தும் வீடுகளில் போதிய காற்றோட்ட வசதி இருக்க வேண்டும். ஏசியின் டெம்ப்ரேச்சர் 24-30 என்ற அளவுக்குள் இருக்க வேண்டும். ஈரப்பதம் (humidity) 40 -70 சதவிகிதம் இருக்க வேண்டும். ஜன்னல்களை லேசாகத் திறந்து வைக்க வேண்டும். எக்ஸாஸ்ட் ஃபேன் இருந்தால் பயன்படுத்த வேண்டும். இன்று பலரும் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வசிக்கிறார்கள். ஜன்னலையோ, கதவையோ திறந்தால் அடுத்த வீடு தெரியும். நெருக்கமான கட்டிடங்களாக இருக்கலாம்.
Also Read: Covid Questions: ஒரு வருடத்திற்கும் மேலாக சானிட்டைசர் பயன்படுத்துகிறேன்; எனக்கு சரும பாதிப்பு வருமா?
இந்நிலையில் நம் வீட்டில் யாரேனும் இருமினாலோ, தும்மினாலோ, அது திறந்தநிலையிலுள்ள ஜன்னல் வழியே அடுத்த வீட்டுக்காரர்களுக்கும் பரவும். தொற்று பரவவும் வாய்ப்புண்டு.
கூலர் பயன்படுத்துவோர், ஏர் ஃபில்டர் உள்ளதாகப் பார்த்துப் பயன்படுத்தலாம்.
மருத்துவமனைகள், உணவு விடுதிகள், அலுவலகங்கள், மால்கள் போன்ற இடங்களில் பயன்படுத்தப்படும் சென்ட்ரலைஸ்டு ஏசியால்தான் பிரச்னையே. தொற்று ஏற்பட்ட ஒரு நபர் அந்தச் சூழலில் இருக்கக்கூடும். அவருக்கு அறிகுறிகளே இல்லாமலும் இருக்கலாம். அப்போது தொற்றுக் கிருமிகள் வெளியே செல்ல வழியின்றி உள்ளேயே சுற்றிக்கொண்டிருக்கும்.
Also Read: Covid Questions: டைபாய்டு நோயிலிருந்து குணமாகியுள்ளேன்; நான் கோவிட் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாமா?
தொற்றுப்பரவலுக்கு இது பெரிய அளவில் வழிவகுக்கும். ஈரப்பதம் வெகுவாகக் குறைந்தால் காற்று வறண்டுபோய், எளிதில் தொற்று பரவும். இந்த நிலையில் நம் சுவாசப் பாதையில் நூலிழை போல உள்ள சிலியா என்ற பகுதி சரியாக வேலை செய்யாமல் கிருமிகள் எளிதில் உள்ளே நுழையும் வாய்ப்புகளும் அதிகம். எனவே மேற்குறிப்பிட்ட விஷயங்களை கவனமாகப் பார்த்து ஏசியை பயன்படுத்தவும். ஏசி மெக்கானிக், இன்ஜினீயர் உதவியோடு அவ்வப்போது ஏசியை சுத்தப்படுத்தி, அது சரியாக இயங்குகிறதா என்பதையும் உறுதிபடுத்திக் கொள்ளவும்."
கொரோனா தொடர்பாகவும், அது ஏற்படுத்தும் பிற உடல், மனநல பாதிப்புகள் தொடர்பாகவும் அனைவர் மனதிலும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கு விடைசொல்லவே இந்த `Covid Questions' பகுதி. இந்தப் பகுதியில் தினம்தோறும் கொரோனா தொடர்பான ஒரு கேள்விக்கு விடையளிக்கப்படும். இதேபோல உங்களுக்கும் கொரோனா தொடர்பான சந்தேகங்கள் இருப்பின் அவற்றை கீழே கமென்ட் செய்யுங்கள். வரும் நாள்களில் அவற்றுக்கு விடையளிக்கிறோம். விகடனுடன் இணைந்திருங்கள்!
source https://www.vikatan.com/health/healthy/can-we-use-air-conditioners-in-this-covid-pandemic-situation
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக