Ad

ஞாயிறு, 5 செப்டம்பர், 2021

`அரசு வேலை சிபாரிசுகளுக்கு என்னை அணுக வேண்டாம்!’ - அமைச்சர் வீட்டில் ஒட்டப்பட்டுள்ள நோட்டீஸ்

தமிழகத்தில் உள்ள கீழமை நீதிமன்றங்களில் காலியாக உள்ள அலுவல உதவியாளர், நகல் பிரிவு அலுவலர், சுகாதாரப் பணியாளர், தூய்மைப் பணியாளர், காவலாளி உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு தமிழகம் முழுவதும் எழுத்துத் தேர்வு நடைபெற்றது. குறைந்தது 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பதால் ஆயிரக்கணக்கானோர் இந்தத் தேர்வை எழுதினர். இந்த நிலையில் தான், புதுக்கோட்டையைச் சேர்ந்த மாநில சட்டத்துறை அமைச்சரின் பரிந்துரைக் கடிதம் பெற்று, அரசுப் பணியிடத்தைப் பெறுவதற்கு திமுகவினர் மட்டுமின்றி பொதுமக்கள் பலருமே தினசரி வீட்டிலும், அலுவலகத்திலும் குவிகின்றனரான். இதனால் சுதாரித்துக் கொண்ட சட்டத்துறை அமைச்சர், சிபாரிசு விஷயமாகத் தன்னைப் பார்க்க வருபவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில், புதுக்கோட்டைக் கிழக்கு 2-ம் வீதியில் உள்ள அவரின்வீட்டின் முன்பு நோட்டீஸ் ஒன்று ஒட்டப்பட்டிருக்கிறது.

அதில், ``உயர் நீதிமன்ற வேலை குறித்து மாண்புமிகு அமைச்சர் அவர்களைச் சந்திக்க யாரும் அணுக வேண்டாம். அப்பணி முழுமையாக உயர் நீதிமன்றக் கட்டுப்பாட்டில் நடைபெறுகிறது" என்ற வாசகத்துடன் ஒட்டப்பட்டிருக்கிறது.

இதுபற்றி அமைச்சர் தரப்பினரிடம் கேட்டபோது, "கட்சிக்காரர்கள் என்று இல்லை, பலரும் வேலை சிபாரிசுக்காக அணுகுகின்றனர். வெளிப்படைத்தன்மையோடு தற்போது அனைத்து நியமனங்களும் நடைபெற்று வருகிறது. இதுபற்றி அவர்கள் தெரிந்துகொள்ளவும், மற்றவர்கள் யாரும் இதற்காக அமைச்சரை அணுகாமல் இருப்பதற்காகவும் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது" என்றனர்.

சட்டத்துறை அமைச்சர் ரகுபதி

Also Read: "உரிய காரணங்களுக்காக மனு செய்தால் நளினி முருகனுக்கு பரோல்"- சட்டத்துறை அமைச்சர் ரகுபதி

இதேபோல், புதுக்கோட்டையைச் சேர்ந்த சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதனும், `நம் உடன்பிறப்புகள் யாரும் வேலைவாய்ப்பு சிபாரிசு சம்மந்தமாக என்னை அணுக வேண்டாம். அது சம்மந்தமாக என்னை அணுகுவது உங்களுக்கு வீண் அலைச்சல் தான்’ என்று வெளிப்படையாகவே பலரிடமும் பேசியதாகவும் சொல்லப்படுகிறத்



source https://www.vikatan.com/news/tamilnadu/do-not-approach-me-for-government-job-recommendations-notice-by-minister-ragupathi

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக