பிரதமர் நரேந்திர மோடியின் 71-வது பிறந்தநாளை முன்னிட்டு, மக்கள் சேவை மையம் சார்பில் கோவை புலியகுளம் பகுதியில் பெண்களுக்கான இலவச மருத்துவ ஆலோசனை முகாம் நடைபெற்றது.
Also Read: `அதை ஷேர் பண்ணதே நான்தான்; ஸ்டிங் ஆபரேஷன் இல்லை!' - வைரல் போட்டோ குறித்து வானதி சீனிவாசன்
இந்த முகாமை பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான வானதி சீனிவாசன் தொடங்கி வைத்தார். அதில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு மருத்துவ ஆலோசனை பெற்றனர்.
அதன்பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த வானதி சீனிவாசன், “பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு நலத் திட்டப் பணிகள் பாஜக சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பெண்கள் பொதுவாக தங்களது உடல் நலம் குறித்து மருத்துவ ஆலோசனைகள் பெறுவதில் தயக்கம் காட்டுவார்கள். அதனால்தான், அவர்களது குடியிருப்புகளுக்கு அருகில் மருத்துவ முகாம் நடத்தி வருகிறோம்.
அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் மக்களுக்கு விரைவாக தடுப்பூசி செலுத்திய நாடுகளில் இந்தியா முதன்மை இடத்தில் உள்ளது. அதேநேரத்தில், தமிழகத்தில் தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் பெண்களைவிட ஆண்கள் தயக்கம் காட்டுகின்றனர். குறிப்பாக, மது பழக்கம் உடைய ஆண்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் தயக்கம் காட்டுகின்றனர்.
எனவே, தமிழக அரசு டாஸ்மாக் கடைகளுக்கு அருகே தடுப்பூசி முகாம்களை நடத்தி அவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் பணிகளை மேற்கொள்ள வேண்டும்” என்றார்.
source https://www.vikatan.com/news/politics/vanathi-srinivasans-advice-to-government-regarding-vaccination
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக