ஈசன் அபிஷேகப் பிரியர் என்பது ஆன்மிகம் சொல்லும் தகவல். எது அசைந்து கொண்டே இருக்கிறதோ, அது குளிர்விக்கப்பட வேண்டும் என்பது அறிவியல் தகவல். இருந்த இடத்திலேயே சிவம் லிங்க வடிவமாக எழுந்தருளி இருந்தாலும் அது சூட்சும வடிவமாகத் தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருக்கிறது என்பது ஆன்மிக நம்பிக்கை. இவ்வாறு தொடர்ந்து இயங்கும் இறை சக்தியை குளிர்விக்க அபிஷேகங்கள் செய்யப்படுகின்றன. பல்வேறு திரவியங்களில் அபிஷேகங்கள் ஆலயம்தோறும் நடைபெறுகின்றன.
திருமுழுக்கு என்று தீந்தமிழில் கூறப்படும் அபிஷேகத் துக்கு ஆரம்பத்தில் நம் முன்னோர் 26 வகை திரவியங்களைப் பயன்படுத்தினார்கள் என்கிறது வரலாறு. இப்போது அது 18-ஆக குறைந்துவிட்டது. எந்த வகை அபிஷேகமும் 24 நிமிடங் கள் மட்டுமே செய்யவேண்டும் என்று ஆகம விதி உள்ளது. ஆனால், சில ஆலயங்களில் 48 நிமிடங்கள் வரை அபிஷேகங்கள் செய்யப்படுவது உண்டு. 27 நட்சத்திரங்களைச் சேர்ந்த அன்பர்கள் கீழ்கண்ட பொருள்களை வாங்கிக் கொடுக்கலாம் என சாஸ்திரங்கள் கூறுகின்றன. குறிப்பாக சிவன் கோயில்களுக்கு பிரதோஷ காலத்தில் கொடுப்பதனால் தங்கள் வேண்டுதல்கள் யாவும் நிறைவேறும் என்பது நம்பிக்கை.
அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சுகந்த தைலம் வாங்கித் தரலாம்.
பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மாவுப்பொடி வாங்கித் தரலாம்.
கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நெல்லிப் பொடி வாங்கித் தரலாம்.
ரோகினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மஞ்சள் பொடி வாங்கித் கொடுக்கலாம்.
மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திரவியப்பொடி வாங்கித் தரலாம்.
திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பசு நெய், பால், தயிர் போன்ற பஞ்சகவ்யம் வாங்கித் தரலாம்.
புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பஞ்சாமிர்தம் வாங்கித் தரலாம்.
பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மா, பலா மற்றும் வாழை போன்றவற்றால் பலாமிர்தம் வாங்கித் தரலாம்.
ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புனுகு, ஜவ்வாது, பச்சைக் கற்பூரம் போன்ற பரிமள திரவியங்கள் வாங்கித் தரலாம்.
Also Read: மகாளய பட்சம்: இந்த நாள்களில் 12 ராசிக்காரர்களும் செய்ய வேண்டிய தானங்கள் என்னென்ன தெரியுமா?
மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மாம்பொடி, நெல்லிப் பொடி வாங்கித் தரலாம்.
பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எண்ணெய், அபிஷேகப்பொடி வாங்கித் தரலாம்.
உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அபிஷேக நீரில் சேர்க்க வில்வம், தர்ப்பை வாங்கித் தரலாம்.
அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தேன் வாங்கி தரலாம்.
சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கரும்புச்சாறு வாங்கி தரலாம்.
சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பழச்சாறு வாங்கி தரலாம். குறிப்பாக, எலுமிச்சை, நாரத்தம், கொழுச்சி, மாதுளம் பழச்சாறு வாங்கி தரலாம்.
விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இளநீர் வாங்கி தரலாம்.
அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அன்னாபிஷேகம் செய்ய அன்னம் கொடுக்கலாம்.
கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் விபூதி வாங்கித் தரலாம்.
மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சந்தனம் வாங்கித் தரலாம்.
பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சுகந்த திரவியங்கள் வாங்கித் தரலாம்.
உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தாராபிஷேகம் செய்ய பாத்திரம் வாங்கிக் கொடுக்கலாம்.
திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தேன் வாங்கித் தரலாம்.
அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சங்காபிஷேகம் செய்யலாம்.
சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பன்னீர் கொடுக்கலாம்.
பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சொர்ணாபிஷேகம் செய்ய நகைகள் கொடுத்து வாங்கலாம்.
உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் குங்குமப்பூ, மலர்கள் அளிக்கலாம்.
ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஸ்நபனம் செய்யலாம். ஸ்நபனம் என்பது ஐந்து வகையான புண்ணிய தீர்த்தம்.
27 நட்சத்திரக்காரர்களுமே விபூதியை அபிஷேகத்துக்கு அளிக்கலாம் என்பது சிறப்பு. மேலும் அபிஷேக நாளில் மற்றவர்களுக்கு ருத்ராட்ச தானம் அளிப்பதும் நன்மை அளிக்கும் என்கின்றன சாஸ்திரங்கள்.
மேற்கண்ட பொருள்களைக் கொடுத்து அபிஷேகித்து வந்தால் ஈசன் அருளால் உங்கள் வாழ்வும் உங்கள் சந்ததியின் வளமும் சீரும் சிறப்புமாக அமையும் என்பது ஆன்றோர் வாக்கு.
source https://www.vikatan.com/spiritual/astrology/astrology-abishekam-materials-for-27-star-signs-to-lead-a-prosperous-life
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக