'மக்களைத் தேடி மருத்துவம்' - முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.
'மக்களைத் தேடி மருத்துவம்' என்ற திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.
இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கொரோனா தொற்று அல்லாத நோய்களை கட்டுப்படுத்துவதே 'மக்களைத் தேடி மருத்துவம்' திட்டத்தின் முக்கிய நோக்கம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இ்து சுகாதார ஆய்வாளர்கள், கிராமப்புற செவிலியர், பெண் சுகாதார தன்னார்வலர்கள் உள்ளிட்டவர்கள் மூலம் செயல்படுத்தப்படும் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக 20 லட்சம் பேர் பயனடையும் வகையில் தொடங்கப்படும் இந்த திட்டம், பின்னர் 1 கோடி பேரை சென்றடையும் வகையில் விரிவாக்கப்பட உள்ளது. ஆண்டுதோறும் 257 கோடி ரூபாய் செலவில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
source https://www.vikatan.com/news/general-news/tamil-news-daily-05-08-2021-just-in-live-updates
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக