Ad

வெள்ளி, 6 ஆகஸ்ட், 2021

ஆரணி: கணவரை இழந்த பெண் கழுத்தறுத்துக் கொலை! - 2 ஆண் நண்பர்களிடம் விசாரணை

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்துள்ள கண்ணமங்கலம் புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சாந்தி. வயது 45. கணவரை இழந்த சாந்தி தனது 15 வயது மகளுடன் வசித்துவந்தார். இந்த நிலையில், நேற்று முன்தினம் அருகிலுள்ள விவசாய நிலத்தில், கழுத்தறுக்கப்பட்ட நிலையில் சாந்தி சடலமாகக் கிடந்தார். கண்ணமங்கலம் போலீஸார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டுவந்தனர். சந்தேகத்தின்பேரில், அதே கிராமத்தைச் சேர்ந்த பால் வியாபாரி ஒருவரைப் பிடித்து கிடுக்கிப்பிடியாக விசாரித்துள்ளனர்.

கொலைச் செய்யப்பட்ட சாந்தி

அப்போது, அவர் கூறிய தகவல்கள் அதிர்ச்சி ரகம். கொலைச் செய்யப்பட்ட சாந்திக்கும், பால் வியாபாரிக்கும் கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்பு இருந்ததாகக் கூறப்படுகிறது. பால் வியாபாரிக்கு ஏற்கெனவே திருமணமாகி மனைவி மற்றும் மூன்று மகள்கள் இருக்கின்றனர். இந்த நிலையில், சில தினங்களாக பால் வியாபாரியுடன் பேசுவதை தவிர்த்த சாந்தி வேறொருவருடன் நெருக்கம் காட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த பால் வியாபாரி கத்தியால் கழுத்தறுத்து சாந்தியை கொலைச் செய்ததாக விவரிக்கிறது, காவல்துறை. சாந்தியுடன் தொடர்பிலிருந்த இரண்டு ஆண் நண்பர்களிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்திவருகிறார்கள்.



source https://www.vikatan.com/news/crime/women-murdered-by-the-man-who-was-in-relationship-says-police

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக